ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தீயாகப் பரவிய கேப்ரில்லா-ஆஜித் காதல் கிசு கிசு.. சர்ச்சைக்கு வைத்த முற்றுப்புள்ளி

விஜய் டிவியின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமான கேப்ரில்லா குழந்தை நட்சத்திரமாக பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடன நிகழ்ச்சிகளும் பங்கேற்று தன் திறமையை நிரூபித்தார். அதன் பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக்பாஸ் நிகழ்ச்சி.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் இவருக்கு பெரிய அளவில் புகழும், பேரும் கிடைத்தது. அதை தொடர்ந்து இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also read:தொடர்ந்து நச்சரிக்கும் மாமியார்.. கோர்ட்டு வாசலில் கேப்ரில்லாவுக்கு நடந்த கொடுமை

இந்நிலையில் சமீப காலமாக இவருக்கும் பாடகர் ஆஜித்துக்கும் காதல் என்று பல செய்திகள் ஊடகங்களில் பரவி வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகராக அறிமுகமான ஆஜித்துக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.

அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு கேப்ரில்லா நெருக்கிய தோழியாக மாறிப்போனார். அதன் பிறகு விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் கூட இவர்கள் இருவரும் இணைந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதில் இவர்களின் ஜோடி பொருத்தமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Also read:பிக்பாஸ் நிகழ்ச்சியே பித்தலாட்டம் தான்.. வெளியேறிய நடிகையின் ஆவேச பேச்சு

இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவியது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் இது குறித்து வாய் திறக்காமல் இருந்தனர். இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு ஆஜித் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது அவர், எனக்கு கேப்ரில்லா தங்கச்சி மாதிரி என்று கூறி அதிர வைத்துள்ளார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எங்கள் இருவருக்கும் அடிக்கடி ஏதாவது ஒரு சண்டை வந்து கொண்டே இருக்கும். அதன் பிறகு நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டோம். அது பார்ப்பவர்களுக்கு காதலர்கள் போன்று தெரிந்திருக்கிறது. ஆனால் உண்மையில் அவள் என் சகோதரி போன்றவள் என்று கூறியுள்ளார்.

Also read:வத்திக்குச்சி வனிதாவை வைத்து காய் நகர்த்தும் விஜய் டிவி.. பிக் பாஸ் சீசன் 6 உறுதியான போட்டியாளர்

Trending News