புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாமா.? முக்கியமாக கவனிக்க வேண்டிய 7 அறிகுறிகள்

Diabetes donate blood: ஒருவர் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது அவருக்கு தேவைப்படும் போது நம் செய்யும் உதவிக்கு தான் தானம் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட தானத்தில் எத்தனையோ வகைகள் இருந்தாலும், சிறந்த தானமாக சொல்வது ரத்த தானம். உடலில் எத்தனையோ உறுப்புகள் இருந்தாலும் நம் உயிர் வாழ வேண்டும் என்றால் மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஐந்து உறுப்புகள் மிகவும் முக்கியமானவை.

அத்துடன் மிக முக்கியமானது ரத்தம். ஏன் என்றால் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்க வேண்டும் என்றால் அதற்கு ரத்தம் மிகவும் முக்கியமானது. ரத்தம் நமது உடலில் திரவப் உறுப்பாக கருதப்படுகிறது. அந்த வகையில் இதயம் சுருங்கி விரியும் பொழுது அதிலிருந்து உடலில் உள்ள அனைத்து ரத்த நாளங்களுக்கும் ரத்தம் செல்கிறது. அப்படி செல்லவில்லை என்றால் எந்த பொறுப்பும் செயல்படாது.

ரத்த தானம் கொடுக்கும் முன் ஞாபகத்தில் வைக்க வேண்டிய சில விஷயங்கள்

அப்படிப்பட்ட ரத்தத்தை சீராக வைக்க வேண்டும் என்றால் ரத்த தானம் செய்வது மிகவும் முக்கியமானது. ரத்த தானம் செய்யும் போது உடலில் இருந்து 225 முதல் 250 மில்லிகிராம் இரும்புச்சத்தை நீக்குகிறது. எனவே இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ரத்த தானம் மூலம் மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படுகிறது.

அந்த வகையில் ரத்த தானத்தால், நோயால் பாதிக்கப்பட்டவர்களை சரியான நேரத்தில் காப்பாற்ற முடிகிறது. ஆரோக்கியமான உடல் உள்ளவர்கள் அவ்வப்போது ரத்த தானம் செய்ய விழிப்புணர்வாக இருக்க வேண்டும். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாமா என்ற கேள்விகள் தற்போது நிலவி வருகிறது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக சிவகங்கை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதாவது சர்க்கரை நோயாளி நிச்சயமாக ரத்த தானம் செய்யலாம். ஆனால் செய்வதற்கு முன் சில விதிமுறைகளை பாலோ பண்ண வேண்டும். ரத்த தானம் செய்யும் முன் ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்கிறோமா என்பதை தெரிந்து கொண்டு ரத்ததானம் செய்ய வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் இருக்கும் பொழுது சர்க்கரை அளவுகள் 140 mg/dl, சாப்பிட்ட பின்பு 200mg/dl இந்த அளவுகள் இருந்தால் தாராளமாக ரத்தம் தானம் செய்யலாம்.

அத்துடன் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க மாத்திரைகள் எடுப்பதால் ரத்த தானம் செய்வதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது. இருந்தாலும் ஒரு மாத காலமாக ஒரே அளவு ஒரே வகையான மாத்திரைகளை உட்கொண்டால் கொடுக்கலாம். இல்லையென்றால் எடுக்கும் மாத்திரை மாற்றப்பட்டிருந்தாலோ அல்லது டோஸ் அளவை கூட்டி இருந்தாலோ குறைந்தது ஒரு மாதம் இடைவெளி விட்டு ரத்த தானம் செய்யலாம்.

முக்கியமாக இன்சுலின் உபயோகித்து வந்தால் ரத்தம் தானம் செய்யக்கூடாது. இன்சுலின் போட்டு ரத்தம் கொடுப்பவருக்கு தாழ் ரத்த சர்க்கரை நிலை” (Hypoglycemia) ஏற்படும் வாய்ப்பு இருப்பதே காரணம். இதனால் இன்சுலின் போட்டு ரத்த அளவை கட்டுப்படுத்தும் சர்க்கரை நோயாளிகள் யாரும் ரத்தத்தை தானமாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களில் வேறு யாரெல்லாம் ரத்த தானம் செய்யக்கூடாது என்றால் இன்சுலின் உபயோகிப்பார்கள், இதய நோய் இருப்பவர்கள், கடந்த ஆறு மாதத்திற்குள் இதய நோய்க்கு ஸ்டண்ட்/ பைபாஸ் செய்யப்பட்டவர்கள், கல்லீரல் நோய் இருப்பவர்கள், சிறுநீரக நோய் இருப்பவர்கள், கை கால் மதமதப்பு போன்ற நியூரோபதி அறிகுறிகள் கொண்டவர்கள் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் இல்லாமல் இருப்பவர்கள்.

இப்படி மேலே குறிப்பிட்ட இவர்கள் யாரும் ரத்த தானம் கொடுக்காமல் இருப்பது கொடுப்பவர்களுக்கு நல்லது என்ற காரணத்தினால் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விஷயங்களை முக்கியமாக கவனத்தில் வைத்துக் கொண்டு ரத்த தானம் செய்யலாம்.

உடலை சீராக வைத்திருக்க சில டிப்ஸ்கள்

Trending News