புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமான ஆளு கிடைக்கலை.. புது ட்விஸ்ட் உடன் வரப்போகும் எதிர்நீச்சல் சீரியல்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் இல்லாமல் கதையை எப்படி கரையேற்றுவது என்று தெரியாமல் தள்ளாடி கொண்டு வருகிறார் இயக்குனர். அந்த வகையில் அவர் இடத்தை நிரப்ப வேண்டும் என்பதற்காக தற்போதைக்கு கதிர் மற்றும் ஞானத்தை வைத்து ஆடு புலி ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். அதனால் தான் என்னமோ இவ்வளவு நாளாக புள்ள பூச்சியாக இருந்த ஞானம் தற்போது ஓவர் அழிச்சாட்டியம் செய்து வருகிறார்.

மேலும் அந்த வீட்டில் உள்ள மருமகள்கள் யாருக்கும் தெரியாமல் செய்து வந்த வேலை தற்போது ஒவ்வொன்றாக வெளியே தெரிய வருகிறது. அதாவது நந்தினி முதியோர் இல்லத்திற்கு சமைத்துக் கொடுக்கும் வேலை அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதனால் கதிர் மற்றும் மாமியார் பெரிய பிரச்சினை பண்ணி இனி நீ எதுவும் பண்ணக்கூடாது என்று நந்தினியை படாதபாடு படுத்தி எடுத்தார்கள்.

Also read: இந்தாம்மா ஏய், மருமகள்களுக்கு ஆப்படிக்க வரும் புது குணசேகரன்.. பிபி-யை எகிற வைக்கும் எதிர்நீச்சல்

இதனைத் தொடர்ந்து தற்போது ஈஸ்வரிக்கும் பிரச்சனை வந்துவிட்டது. அதாவது கல்லூரியில் அடுத்த வாரம் நீங்கள் பேச வேண்டும் என்று வீட்டிற்கு வந்து கூறிய ஒரு ஆசிரியர் மூலம் ஈஸ்வரி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற விஷயம் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. அதற்கு கதிர் மற்றும் குணசேகரனின் அம்மா மிகவும் ஆவேசத்துடன் இனி இந்த வீட்டில் உள்ள பெண்கள் யாரும் வெளியே போகக்கூடாது.

கொஞ்சம் இடம் கொடுத்தால் ரொம்ப ஓவராக ஆடிக்கிட்டு இருக்கீங்களா, ஒழுங்கு மரியாதையா வீட்டில் உள்ள வேலையை பார்த்துட்டு அடங்கி இருங்க என்று மாமியார் வெளுத்து வாங்குகிறார். அதற்கு ஈஸ்வரி இனி என்ன பண்ண வேண்டும் என்று நான் முடிவு பண்ணுகிறேன் நீங்கள் உங்கள் வேலையை பாருங்க என்று பதிலடி கொடுக்கிறார். ஆக மொத்தத்தில் குணசேகரன் இல்லாமல் ஒவ்வொருவரும் அவர்களுடைய இஷ்டத்திற்கு ஆடிக் கொண்டு வருகிறார்கள்.

Also read: வெறுப்பை கக்கும் எதிர்நீச்சல் சீரியல், குணசேகரனை மிஞ்சும் கதிர்.. போற போக்கு பார்த்தா டம்மி ஆயிடும் போல

இதற்கிடையில் குணசேகரன் கேரக்டருக்கு தற்போது வரை வேறு யாரும் வந்த பாடாக இல்லை. அதற்கு காரணம் இவருடைய கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆளு யாரும் கிடைக்கலை. ஒருவேளை வேறு யாரையாவது குணசேகரன் கேரக்டருக்கு போட்டு அவர் மூலமாக இந்த நாடகம் சொதப்பிவிட்டால் மொத்த சீரியலும் வேஸ்ட் ஆகிவிடும் என்பதால் எதிர்நீச்சல் டீம் ஒரு முடிவு எடுத்து இருக்கிறது.

அதாவது இப்போதைக்கு அவர் இல்லாமலேயே பெயரை மட்டும் வைத்து கதையை உருட்டலாம். அதன் பின் கதைக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொன்றையும் மாற்றிக் கொண்டு போகலாம். அந்த வகையில் இப்போதைக்கு குணசேகரன் கேரக்டருக்கு வேறு யாரும் வரப்போவதில்லை. அதனால் இருப்பவர்களை வைத்தே கதையை நகர்த்தப் போகிறார்கள். அதனால் தான் தற்போது குணசேகரனின் அம்மா மற்றும் தம்பிகள் வன்மத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.

Also read: டிஆர்பி-க்காக ஆர்டிஸ்ட்களை பாடா படுத்தும் எதிர்நீச்சல்.. குணசேகரனின் தம்பி பொண்டாட்டிக்கு போடப்பட்ட ட்ரிப்ஸ்

Trending News