வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

டூப் போடாமல் உயிரை பணயம் வைத்த கேப்டன்.. 28 வருட ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர்

சினிமாவிலும் அரசியலிலும் தடம்பதித்த கேப்டன் விஜயகாந்த் தமிழில் இதுவரை 155 படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் 80-களில் இவர் நடிப்பில் வெளியான அம்மன் வீட்டு கோயில் கிழக்காலே, பூந்தோட்ட காவல்காரன், செந்தூரப்பூவே, தாயகம் போன்ற அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இவரது 100-வது படமான கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பிறகு இவருக்கு கேப்டன் என்ற பெயரையும் பெற்றுத் தந்தது.

அதன்பிறகு 1994 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தின் சுவாரசியமான ரகசியம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க, பி வாசு இயக்கினார். இந்தப்படத்தில் இடம்பெற்ற விஜயகாந்த் மணிக்கூண்டு காட்சியில் எந்தவித டூப் மற்றும் ரோப் கயிறு கூட பயன்படுத்தாமல் உயரமான மணி கூண்டில் ஏறி படக்குழுவை ஆச்சரியப்படுத்தினாராம்.

இந்தத் தகவலை சேதுபதி ஐபிஎஸ் படம் வெளியான 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஏவிஎம் நிறுவனத்தின் பொறுப்பாளர் அருணா குகன் ட்விட் செய்திருக்கிறார். இந்த படத்தில் இந்திய நாட்டில் இருந்து தப்பிக்க வேண்டும் என சில பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி பள்ளியை குறி வைத்து, அதை முற்றுகையிட்டு அதில் இருக்கும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை பணைய கைதிகள் ஆக்குவார்கள்.

மேலும் அந்த தீவிரவாதிகள் தப்பிப்பதற்காக பணம் மற்றும் ஒரு விமானத்தை கோரிக்கையாக அரசுக்கு விடுகின்றனர். அதை சமாளிக்க அரசு சார்பில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக சேதுபதி ஐபிஎஸ் என்ற கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் விஜயகாந்த் பயங்கரவாதிகளின் சதியை முறியடித்து பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை விடுவித்து, பயங்கரவாதிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்தப் படத்தில்தான் விஜயகாந்த் டூப் போடாமல் உயிரை பணயம் வைத்து ரோப் கயிறு கூட எந்த பயன்படுத்தாமல் படத்தில் வரும் அனைத்து காட்சிகளையும் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்ற எண்ணத்தில் தானே நடித்திருப்பார். இப்படி சினிமாவின் தீவிர ஆர்வம் கொண்ட விஜயகாந்த் தன்னுடைய படங்களில் டூப் போடாமல் முழுமையாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்தனர்.

அவருக்கு மட்டும் இந்த குடி போதைப் பழக்கம் இல்லை என்றால் இன்னும் சிறிது காலம் சினிமாவிலும் அரசியலிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருப்பார். இருப்பினும் அவர் படங்களில் நடித்த விதம் மற்றும் அவருடைய படங்களை பார்த்த ரசிகர்கள் இன்றும் அவரை புகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

AVM-twit-cinemapettai
AVM-twit-cinemapettai

Trending News