டிராகன் பட விழாவில் பிரதீப் ரங்கநாதனின் குமுறல் தான் சமூக வலைத்தளத்தில் ஹாட் டாப்பிக்காக போய்க்கொண்டிருக்கிறது. என்னைஅழிக்க பார்க்கிறார்கள், ஆரம்பத்திலேயே இலை போல் கிள்ளி எரிகிறார்கள், என்னை வாழ விடுங்கள் என்பது போல் அவரது பேச்சுத் தோரணை இருந்தது.
இதை சற்று உற்று ஆராய்ந்தால், அவர் நடிகர் தனுசை பழி போடுவது போல் இருக்கிறது. தனுஷ் போல் நடிக்கிறார், தனுசை பின் தொடர்கிறார் என்றெல்லாம் இவர் மீது ஒரு பிம்பத்தை வைக்கிறார்கள். இப்படித்தான் இவர் வளர்ச்சியை அடக்குமுறை செய்கிறார்கள் என்பது பிரதீப் ரங்கநாதனின் குற்றச்சாட்டு.
முற்றிலும் அது உண்மை இல்லை, ஆரம்பத்தில் இதே பிரச்சனையை நடிக்க வந்த புதிதில் கேப்டன் விஜயகாந்த் சந்தித்துள்ளார். கருப்பா இருக்கிறவர்கள் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்பதை உடைத்து வந்தவர்கள் ரஜினி மற்றும் விஜயகாந்த். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்த சமயம் அது.
நடிக்க வந்த புதிதிலேயே விஜயகாந்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது தமிழ் சினிமா. விஜயகாந்த் பெரிய பணக்கார குடும்பத்தில் இருந்து வந்தாலும் மற்றவரிடம் கையேந்தாத கைகள். சென்னையில் வறுமையின் பிடியில் இருந்து வளர்ந்து வரும் பொழுது, பெரிய தயாரிப்பாளர் ஒருவர் அவருக்கு புது படத்தில் நடிக்க அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார்.
அப்புறம்தான் தெரிந்தது அவர் கொடுத்த அட்வான்ஸ் ரஜினியின் படத்தில் விஜயகாந்தை வில்லனாக நடிக்க வைப்பதற்கு. இப்படி அவர் வளரும்போதே அவர் பிம்பத்தை உடைக்க திட்டம் நடந்தது. ஆனால் விஜயகாந்தின் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் அதை தடுத்து நிறுத்தி விஜயகாந்தை ஜெயிக்க வைத்தார்.
பிரதீப் ரங்கநாதன் கூறும் குற்றச்சாட்டு கிட்டத்தட்ட இதை போல் தான் இருக்கிறது. உண்மையில் ஒருவரிடம் திறமை இருந்தால் அதை யாராலும் உடைக்க முடியாது. விஜயகாந்த் போல் பிரதீப் நிச்சயமாக ஜெயிப்பார். இதை புரிந்து கொண்டால் அவருக்கு எங்கும், எதிலும் தடை இல்லை.