வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நா இல்லாம, என் பெயர் இல்லாம, நீ ஜெயிச்சுக்கோ! கடைசி வரை நிறைவேறாத விஜயகாந்தின் ஆசை

Captain Vijayakanth’s last wish went unfulfilled: கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இவரது மரணம் தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய கடைசி ஆசை நிறைவேறாமலே போய்விட்டதே! என்று குடும்பத்தினர் மட்டுமல்ல தொண்டர்களும் வருத்தப்படுகின்றனர். விஜயகாந்த் தன்னுடைய இரண்டு மகன்களிடமும் கண்டிப்பாக இருக்கக்கூடியவர். அவரைப் பார்த்தாலே இரண்டு பசங்களும் பயப்படுவாங்கலாம். தன்னுடைய பசங்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அவர்களிடம் எப்போதுமே கண்டிப்பாக நடந்து கொள்வார்.

மகன்களை கேப்டன் சிறப்பாக வளர்த்திருக்கிறார். இப்போது இருக்கும் விஐபி வீட்டுப் பிள்ளைகளுக்கெல்லாம் ரொம்பவே செல்லம் கொடுத்து கஷ்ட நஷ்டம் எல்லாம் தெரியாமல் வளர்க்கிறார்கள். முளைச்சு மூணு இலை விடாதது எல்லாம் குதிரை மாதிரி இருக்கிற பைக்கை ஒட்டிக்கொண்டு சீன் போடுகிறார்கள்.

அது மட்டுமல்ல பொது சமூகத்தில் அவர்களைப் பற்றி கேள்விப்படும் விஷயங்களை எல்லாம் தவறாகத்தான் இருக்கும். ஆனால் இதுவரை விஜயகாந்த் குடும்பத்தில் இருக்கும் இந்த இரண்டு பசங்களைப் பற்றி எந்த தவறான விஷயமும் வெளிவந்ததில்லை. பார்ட்டி, பப், பெண்களுடன் நெருக்கமான புகைப்படம், தண்ணி அடித்தல், புகைபிடிப்பது என எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் தன்னுடைய பசங்களை கட்டுக்கோப்பாக வளர்த்தவர் தான் கேப்டன்.

Also Read: கேப்டனை புதைச்ச இடத்துல ஈரம் கூட காயல.! பக்கா அரசியல்வாதியாக மாறிய பிரேமலதா

விஜயகாந்தின் கடைசி ஆசை

அவர் மட்டும் நினைத்திருந்தால் தன்னுடைய இரண்டு மகன்களையும் சினிமாவில் மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. ‘நான் இல்லாம, என் பெயர் இல்லாம, நீங்க ஜெயிச்சுக்கங்க’ என்று சொல்லிவிட்டார். அவர் தன்னுடைய மகனை சுலபமாக வாரிசு நடிகராக்க விரும்பவில்லை. உன்னுடைய திறமையால் நீ வெற்றி பெறு! என்று ஒதுக்கி விட்டார். ஆனால் அவர் தன்னுடைய மகன்களை சினிமாவில் வளர்த்து விட்டிருக்க வேண்டும் என்று திரை விமர்சகர் அந்தணன் சமீபத்திய பேட்டியில் வருத்துடன் பேசினார்.

சினிமாவில் வளர வேண்டும் என ஆசைப்பட்ட விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த முதல் படமான சகாப்தம் படத்தின் தொடக்க விழாவில் கேப்டன் கம்பீரமாக வந்து உட்கார்ந்திருந்தார். அப்போதெல்லாம் அவர் ஆக்டிவ்வாகத்தான் இருந்தார். லண்டன் சென்று நடிப்பிற்கான படிப்பை எல்லாம் முடித்து வந்த சண்முக பாண்டியனை ஏஆர் முருகதாஸ் போன்ற பெரிய இயக்குனர்களின் கையில் ஒப்படைத்து, 15 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக படத்தை எடுத்திருந்தால், இப்போது அவருடைய ரேன்ஜே வேறு.

அதை கேப்டன் செய்ய தவறிவிட்டார். அத செய்யாம போயிட்டோமே என்று கேப்டனின் ஆத்மா இப்போது நிச்சயம் வருத்தப்படும். மேலும் விஜயகாந்த் தன்னுடைய மகன்களின் திருமணத்தை எப்படியாவது செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார். அதுமட்டும் நடந்திருந்தால் இன்னும் அவருக்கு மன நிறைவாக இருந்திருக்கும். இதை அவர் உரிய காலத்தில் செய்திருக்க வேண்டும். தன்னுடைய மூத்த மகனுக்கு பொண்ணு பார்த்து திருமண ஏற்பாடுகள் நடந்தது, ஆனா சில காரணங்களால் தடைபட்டது. கடைசி வரை தன்னுடைய மகன்களை திருமண கோலத்தில் பார்க்காமல் போய்விட்டாரே! என்று குடும்பத்தினர் இப்போது சொல்லிச் சொல்லி அழுகின்றனர்.

Also Read: கேப்டனின் இறுதி சடங்கில் மனைவி எடுத்த சபதம்.. பதவி வெறி யாரை விட்டுச்சு, அனுதாப ஓட்டு தேடும் குடும்பம்

Trending News