captain 5 Thriller Movies: மலையாள சினிமா தான் சஸ்பெண்ட் திரில்லர் படங்கள் கொடுப்பதில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவில் தமிழில் வெளிவந்த கேப்டனின் படங்களும் உண்டு.. இன்றும் டிவியில் ஒளிபரப்பினால் சீட் நுனி வரை கொண்டு சென்ற திகில் படங்கள்.
நூறாவது நாள்: விஜயகாந்த் நளினி மோகன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கும். நளினிக்கு வரும் விசித்திரக் கனவை மையமாக வைத்து எடுத்திருப்பார்கள். ஒரு திருட்டை மறைக்க மோகன் செய்யும் தொடர் கொலைகள் தான் இந்த படத்தின் கதை.
சோழா பிக்னிக் மர்மத்தை உடைத்த ஊமை விழிகள்
ஊமை விழிகள்: 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்திற்கு இப்போதும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். சோழா பிக்னிக் வில்லேஜில் நடக்கும் மர்ம கொலைகளை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை. இதில் விஜயகாந்த் தீனதயாளன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கேப்டனின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து இயக்கி, தயாரித்த படம்.
உளவுத்துறை: கடலில் மர்மமான முறையில் பலர் இறக்கிறார்கள். இதனை கண்டுபிடிக்க உளவுத்துறை சார்பில் திறமையான ஆபிசர் வசந்த் பெரியசாமி ஆகிய விஜயகாந்தை அனுப்புகிறது. அதன்பின் விஜயகாந்த் அந்த மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
புலன் விசாரணை: மருத்துவமனையில் நடக்கும் மனித உறுப்புகள் திருட்டு சம்பந்தமான கதை. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருப்பார். இதை கண்டுபிடிக்கும் அதிகாரியாக விஜயகாந்த் நடித்திருப்பார். திரில்லர் கலந்த இன்வெஸ்டிகேஷன் ஸ்டோரியாக வந்த படம் இது.
கேப்டன் பிரபாகரன்: சந்தன மர கடத்தல் வீரப்பன் பற்றிய கதை இது. யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை கடத்தும் வீரப்பனை துணிச்சலாக காட்டுக்குள் சென்று பிடிக்கும் பிரபாகரன் கதாபாத்திரம் தான் கேப்டனுக்கு. மன்சூர் அலிகான் வீரப்பன் கதாபாத்திரத்தில் அவ்வளவு இயல்பாக நடித்திருப்பார். இதை போல் மாநகர காவல், சேதுபதி ஐபிஎஸ் என விஜயகாந்துக்கு நிறைய சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள் இருக்கிறது.
- சீட்டின் நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்
- ஓடிடி-யில் நடுநடுங்க வைத்த 5 மலையாள திரில்லர் படங்கள்