தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் சமீபத்தில் மனமொத்து பிரிய போவதாக அறிவித்தனர். ஆனால் அடிக்கடி இவர்கள் இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் தங்களது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் இவர்களை இணைக்கும் முயற்சியில் இரு குடும்பங்களும் செயல்பட்டு வருவதாக தகவலும் வெளியானது.
ஆனால் தற்போது ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவர் மீதும் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதாவது தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைபிடிப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். பொதுவாக திரைப்படங்களில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் காட்சி வந்தால் கீழே எச்சரிக்கை வாசகம் இடம்பெறும்.
ஆனால் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைப்பிடிக்கும் போது அந்த வாசகம் இடம் பெறவில்லை. இதனால் தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் வேலையில்லா பட்டதாரி படத்தின் தயாரிப்பு நிறுவன இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ஏற்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரையும் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் ரத்து செய்யக் கோரியும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பினர் நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தனர்.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. இதனால் தற்போது தனுசும் வழக்கு ரத்து செய்யக்கோரி மனு தொடர உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தனுஷ் ஹாலிவுட் படமான தி கிரே மேன் பட வேலைக்காக தற்போது வெளிநாடு சென்று உள்ளதால் அவர் சென்னை திரும்பிய பிறகு மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தனுஷ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.