இன்றைய தலைமுறைகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமான ஜிபி முத்து டிக் டாக் செயலி மூலம் தனது பயணத்தை தொடங்கி தற்பொழுது இவர் இணையதள யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானார். தனது நகைச்சுவை பேச்சாலும் அப்பாவித்தனமான முக பாவனைகளாலும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு திரைத்துறையில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளார்.
இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். ஜிபி முத்து விடம் “நான் உட்பட உங்களின் ரசிகன் தான்” என கமலஹாசனை கூறியிருந்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக உள்ளே சென்று போட்டிகளில் பங்கு பெற்று அனைவரது பாராட்டையும் பெற்றார். இவரின் வெகுளித்தனமான பேச்சுக்கள் மூலம் பிக் பாஸ் வீட்டில் கலகலப்பை ஏற்படுத்தினார்.
புது வீடு பால் காய்ச்சிய ஜிபி முத்து

Also Read: ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக வாங்கிய சம்பளம்.. 14 நாட்களுக்கு இவ்வளவா?
ஜிபி முத்துவிற்காகவே சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியினை பார்த்தனர். இந்த நிலையில் தனது மகனின் உடல்நிலை சரியில்லாததை கண்டு முதல் ஆளாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அப்பொழுது அவர் கூறியது பணம், புகழ், பெயர் எல்லாம் எனக்கு முக்கியமில்லை உடல்நிலை சரியில்லாத என் பையன் தான் எனக்கு முக்கியம் என்று தனது மகனுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இவர் தற்பொழுது “ஓ மை கோஸ்ட்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளியான “கனெக்ட்” திரைப்படத்தில் ஜிபி முத்து ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிக் பாஸுக்கு பின் கொட்டும் பண மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஜிபி முத்து

Also Read: கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திய விக்கி-நயன் ஜோடி.. மீடியா முன் கிழித்தெறிந்த ஜிபி முத்து
கனெக்ட் வெளியீட்டு விழாவில் நயன்தாராவிற்கு எந்த அளவிற்கு மக்கள் கூட்டம் உள்ளதோ அதே அளவிற்கு ஜிபி முத்து-விற்கும் ரசிகர் கூட்டம் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 படத்தில் ஜிபி முத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்தில் ஜிபி முத்து ஒரு முழு நீள காமெடி நடிகராக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தற்பொழுது பிக் பாஸுக்கு பின் கொட்டும் பண மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஜிபி முத்து புதிதாக வீடு ஒன்றை கட்டி அதில் எளிமையாக தனது குடும்பத்தினருடன் பால் பால் காய்ச்சி குடியேறி உள்ளார். தற்பொழுது அந்தப் புகைப்படம் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.
புது வீடு பால் காய்ச்சி ஜிபி முத்து வெளியிட்ட வைரல் புகைப்படம்

Also Read: சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டி விடும் ஜிபி முத்து.. கதறி அழும் சிங்கிள்ஸ்