demonte colony2-trailer

தப்பிக்க முடியாத ஆபத்தான உலகத்தில் சிக்கித் தவிக்கும் ஆத்மா.. கொல நடுங்க வைக்கும் டிமான்டி காலனி 2 ட்ரெய்லர்

Demonte Colony 2 Trailer: திகில் படமா கூப்பிடுங்கப்பா அருள்நிதியை என்று சொல்லும் அளவுக்கு அவர் ஹாரர் கதைகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஒரு

fight club-teaser

யாரு செத்தாலும் இந்த சண்டை மட்டும் சாவாது.. சம்பவத்திற்கு தயாராகும் லோகேஷின் Fight Club டீசர்

Fight Club Movie Teaser: ஒரு இயக்குனராக சர்வதேச அளவில் திரும்பிப் பார்க்க வைத்த லோகேஷ் இப்போது முதலாளியாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். சமீபத்தில் அவர் தன்னுடைய தயாரிப்பு

annaporani-trailer

புடிச்சத பண்ணா லட்சம் பேரும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகலாம்.. வெளியானது அன்னபூரணி ட்ரெய்லர்

Annapoorani Trailer: நயன்தாராவின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் இப்போது வெளியாகி கொண்டிருக்கிறது. ஜவான், இறைவன் படங்களை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள அன்னபூரணி டிசம்பர் 1ம்

dhanush-caption miller

தனியா வந்தா தல மட்டும் உருளும், படையா வந்தா சவமலை குவியும்.. வெறியேத்தும் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள்

Captain Miller First Single: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் நடிப்பில் கேப்டன் மில்லர் உருவாகி இருக்கிறது. அடுத்த

80s build up-trailer

சாவு வீட்ட டாவு வீடா ஆக்கிட்டானே எமதர்மா.. சந்தானத்தின் அலப்பறையில் 80ஸ் பில்டப் ட்ரைலர்

80s Buildup Trailer: தோல்விகள் கண்டாலும் துவண்டு போகாத சிங்கம் தான் சந்தானம். ஹீரோவாக உருவெடுத்த பிறகு இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஆனால் ஒரு

aval-peyar-rajni

மனுஷனா, பிசாசா யாருக்கு தெரியும்.? பதட்டத்திலேயே வைத்துள்ள அவள் பெயர் ரஜ்னி ட்ரெய்லர்

Aval Peyar Rajni: மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் அவள் பெயர் ரஜ்னி என்ற படம் உருவாகி இருக்கிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நமிதா பிரமோத், அஸ்வின் குமார், ரெபா மோனிகா ஜான் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் லோகேஷ் கலந்து கொண்டார். இந்நிலையில் நெஞ்சை பதப்பதைக்க வைக்கும் காட்சிகள் அவள் பெயர் ரஜ்னி ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது. சமீபகாலமாக காளிதாஸ் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த வகையில் இதுவரை அவர் நடித்திடாத புதிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். திரில்லர் கலந்த படமாக உருவாகியுள்ள இதில் பேய் பிசாசு மீது நம்பிக்கை உள்ளதா, மனுஷனா பிசாசா யாருக்கு தெரியும் என பயமுறுத்தும் வசனங்களும் இடம் பெற்று இருக்கிறது.

மேலும் இந்த ட்ரெய்லரிலேயே நிறைய இடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகைப்படங்கள் மற்றும் சாயலை மறைமுகமாக படக்குழு காட்டி இருக்கிறார்கள். ஆகையால் படத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் காளிதாஸ் ஜெயராமின் நடிப்பும் அபாரமாக இருக்கிறது.

இந்த ட்ரெய்லர் மூலம் படத்தை பார்க்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கண்டிப்பாக காளிதாஸ் ஜெயராமின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை அவள் பெயர் ரஜ்னி படம் ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

parking-trailer

எலியும் பூனையுமாய் ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர்.. பட்டையை கிளப்பும் பார்க்கிங் ட்ரெய்லர்

Parking Trailer: இப்போது ஹரிஷ் கல்யாண் வளர்ந்து வரும் நடிகராக இருந்து கொண்டிருக்கிறார். சாக்லேட் பாயாக வளம் வந்து கொண்டிருந்த இவர் இப்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பார்க்கிங் என்ற படம் உருவாகி இருக்கிறது.

ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர், இந்துஜா மற்றும் இளவரசு ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். டிசம்பர் ஒன்றாம் தேதி பார்க்கிங் படம் ரிலீஸாக உள்ள நிலையில் இப்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. நடுத்தர குடும்பத்தில் இருக்கும் சாமானிய மனிதனின் கார் கனவு தான் இந்த படத்தின் கதை.

அதாவது படித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஹரிஷ் கல்யாண் ஒரு வீட்டின் மாடியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அப்போது கீழ் வீட்டில் எம்எஸ் பாஸ்கர் குடியிருக்கிறார். இந்நிலையில் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஹரிஷ் கல்யாண் தனது கனவை நிறைவேற்றும் படி காரை வாங்கி விடுகிறார்.

ஆனால் அதற்கான பார்க்கிங்கில் தான் பிரச்சனை தொடங்குகிறது. அதாவது ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு கீழே எம் எஸ் பாஸ்கர் இருப்பதால் அங்கு காரை நிறுத்தக்கூடாது என்ற பிரச்சனை வருகிறது. ஒரு கட்டத்தில் பிரச்சனை பூதாகரம் எடுக்க காரின் கண்ணாடியை எம்.எஸ். பாஸ்கர் கல் எடுத்து உடைத்து விடுகிறார்.

இதனால் கோபத்தில் ஹரிஷ் கல்யாண் எம்எஸ் பாஸ்கர் மீது கை வைத்து விடுகிறார். இதைத்தொடர்ந்து போலீஸ், கேஸ் என ஹரிஷ் கல்யாண் பெரும் சிக்கலை சந்திக்கிறார். இவ்வாறு எலியும், பூனையுமாக இருக்கும் ஹரிஷ் கல்யாண், எம் எஸ் கூட்டணி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த ட்ரெய்லர் படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

lal-salaam-movie

போட்டி இல்ல போர், விளையாட்டுல மதத்தை கலந்து இருக்கீங்க.. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான லால் சலாம் டீசர்

Lal Salaam Teaser: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் லால் சலாம். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

லால் சலாம் படத்தின் டீசர் தீபாவளி ஸ்பெஷலாக சற்று முன் வெளியாகி இணையத்தில் கலக்கி கொண்டிருக்கிறது. இந்த டீசரில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரின் ஆக்ரோசமான காட்சிகளும், ரஜினியின் மாஸ் என்ட்ரியும் இடம் பெற்றுள்ளது.

கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் லால் சலாம் படம் விளையாட்டில் மத அரசியல் இருப்பதை பேசி உள்ளதாக இந்த டீசர் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் எதிரில் அணிகளாக மோதிக் கொள்வதை இந்தியா- பாகிஸ்தான் போல பில்டப் செய்யப்படுகிறது.

இதனால் இந்து- முஸ்லிம் இடையே மத கலவரம் வெடிக்க அதற்கு பஞ்சாயத்து பண்ண கேங்ஸ்டர் மொய்தீன் பாய் களம் இறங்குகிறார். இந்த டீசரில் ரஜினி, ‘விளையாட்டு மதத்தை கலந்திருக்கீங்க. குழந்தைகள் மனதில் விஷத்தை விதைத்திருக்கிறீர், தப்பா இருக்கு!’ என்று ஆதங்கத்துடன் பேசுகிறார்.

இதில் ரஜினியின் கேரக்டர் செம ஸ்ட்ராங்காக இருக்கிறது என்பதை படத்தின் டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

karuppar-nagaram

உன் உடம்புல இரத்தம் சூடா இருக்கு, சண்டை செஞ்சி சம்பவம் பண்ணும் ஜெய்.. மிரளவிடும் கருப்பர் நகரம் டீசர்

Karuppar Nagaram: நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர்தான் கோபி நயினார். இவர் இப்போது கருப்பர் நகரம் என்ற வித்தியாசமான கதைக்களத்துடன் ஒரு படத்தை எடுத்திருக்கிறார். இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

சமீபகாலமாக வடசென்னையை மையமாக வைத்து நிறைய படங்கள் வெளியான நிலையில் இப்போது அதேபோன்று கதையில் தான் கருப்பர் நகரம் படமும் உருவாகி இருக்கிறது. இப்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த டீசரின் தொடக்கத்திலேயே எம்ஜிஆர் பாடல் ஒலிக்கிறது.

முழுக்க முழுக்க வடசென்னை பகுதியில் அவர்களின் சாயலில் பக்காவாக இயக்குனர் படத்தை உருவாக்கி இருக்கிறார். மேலும் உடம்பில் ரத்தம் சூடா இருக்கிற வரைக்கும் தான் சண்டை போட முடியும் என தெறிக்கவிடும் வசனங்களும் கருப்பர் நகரம் டீசரில் இடம் பெற்று கவனத்தை பெற்றிருக்கிறது.

ஜெய் சமீபகாலமாக ஹிட் படங்கள் கொடுக்க திணறிக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் அவருடைய நடிப்பில் வெளியான தீரா காதல் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்போது கருப்பர் நகரம் படத்தில் ஜெய்யின் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருக்கும் என்பது டீச்சரை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இது போன்ற கதைகளும் ஒன்றும் புதிதில்லை. ஏற்கனவே காக்கா முட்டை, வடசென்னை போன்ற பல வித்தியாசமான கதைக்களத்தில் நடித்திருக்கிறார். ஆகையால் விஜய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்குமே கருப்பர் நகரம் படம் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

thug-life-kamal

மருதநாயகம் போல தோற்றத்தில் வெறிகொண்டு வேட்டையாடும் வேலு நாயக்கர்.. முரட்டு சம்பவத்துடன் வெளிவந்த Thug Life வீடியோ

KH234 Title Video: உலக நாயகன் கமல் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் ரிலீஸுக்காக ஒட்டு மொத்த சினிமாவும் காத்திருக்கிறது. இது தவிர பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி படத்தில் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சூழலில் நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்தினம் மற்றும் கமல் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருக்கிறது. இது கமலின் 234 ஆவது படமாகும். இந்நிலையில் கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கமல் 234 படத்தை தயாரிக்கிறது.

இன்று கமலின் பிறந்தநாளை முன்னிட்டு காலை ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது. அதாவது இன்று மாலை 5 மணிக்கு கமல் 234 படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதாவது இதில் கமலின் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற ஆரம்ப புள்ளியாக தொடங்குகிறது. இந்த படத்திற்கு “Thug Life” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். மேலும் நாயகன் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த நிலையில் கண்டிப்பாக இந்த படம் தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் இடம்பெறும் என நம்பப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் வசூலை வாரி குவித்து மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்திருந்தது.

இப்படி இருக்கும் நிலையில் கமல் மற்றும் மணிரத்தினம் கூட்டணி போட்டால் சொல்லவா வேண்டும். கண்டிப்பாக தரமான சம்பவம் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் மற்ற நடிகர், நடிகைகளின் விவரங்கள் விரைவில் வெளியாக வெளியாக இருக்கிறது. மேலும் இந்த டைட்டில் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Jigarthanda DoubleX

சுயசரிதையை மாத்தி எழுதலாமா?. எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸின் வெறித்தனமான 2 ட்ரெய்லர்

Jigarthanda DoubleX – Trailer: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்  ஆன படம் தான் ஜிகர்தண்டா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. இந்த படம் 1975ல் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது.  எஸ்ஜே சூர்யா லாரன்ஸை வைத்து படம் எடுக்கிறார்.

அந்த படம் எப்படி உருவாகிறது, இந்த படம் எடுக்கும் போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை ஆக்சன், காமெடி கலந்து காட்டப்படுகிறது. ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தில்  ரவுடியான பாபி சிம்ஹாவை வைத்து சித்தார்த் ஒரு படம் எடுத்தார்.

அதேபோன்றுதான் இரண்டாம் பாகத்தில் முரட்டு ரவுடியாக இருக்கும் லாரன்ஸை வைத்து எஸ்ஜே சூர்யா படம் எடுப்பது போல் திரை கதையை அமைத்திருக்கின்றனர். ட்ரெய்லரில் லாரன்ஸ் சொல்லும் டயலாக் அல்டிமேட் ஆக இருக்கிறது.

‘கருப்பா இருந்தா கேவலமா’, ‘தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோ’, ‘நல்லவங்கள பத்தி படம் எடுத்தால் யாரும் பார்க்கிறதில்லை’ , ‘சுயசரிதையை கொஞ்சம் மாத்தி எழுதிரலாமா?’, ‘இங்கு எவனும் எதையும் புதுசா எழுதிட முடியாது. பேனாவை கெட்டியா மட்டும் பிடிச்சு கிட்டா போதும் எழுதப்பட்டது எழுதப்படும்’ என இந்த ட்ரெய்லரில் இடம் பெறும் டயலாக் எல்லாம்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த படம் நிச்சயம் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அமையும் என்று  ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது.

conjuring-kannappan-trailer-IMAGE

சந்தானம் பாணியில் களம் இறங்கிய சதீஷ்.. சுந்தர் சி-யை மிஞ்சும் காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரெய்லர்

Conjuring Kannappan Trailer: சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவான ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருக்கும் இந்த படம் காமெடி கலந்த திரில்லர் ஜோனரில் எடுக்கப்பட்டிருக்கிறது.

முன்பு சந்தானம் தான் இது போன்ற படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார். இப்போது காமெடி நடிகரான சதீஷ் புது முயற்சியாக சந்தானம் பாணியில் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தில் ஹீரோவாக களம் இறங்கி உள்ளார். இதில் சதீஷ் உடன் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லரில் சதீஷ் தன்னுடைய கனவில் தினமும் ஒரு பேய் பங்களாவில் சென்று மாட்டிக் கொள்கிறார். அங்கு அவர் பேய் இடம் அடி வாங்குவது நிஜத்தில் வலிக்கிறது.

ஒருவேளை அந்த கனவில் இறந்து விட்டால் நிஜத்திலும் இறந்து விடுவாய் என்று, படத்தில் டாக்டராக வரும் நாசர் பயமுறுத்துகிறார். இந்தப் பேய் கனவில் சதீஷ் உடன் மொத்த குடும்பமும் மாட்டிக் கொள்கிறது. அதிலும் சரண்யா, விடிவி கணேஷ், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி கோஸ்டிகளால் கலகலப்பான மூடுக்கு மாறுகிறது.

இதில் காட்டப்படும் சில காமெடி காட்சிகள் நன்றாகவே கை கொடுத்துள்ளது. அதிலும் இறுதியில் ஆனந்தராஜ் பேசிய டயலாக் ஆனா ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட கன்டென்ட்ல கொலாபிரேட் பண்ணி விட்டு இருக்கீங்களே டா!’ என பேசியது அல்டிமேட் ஆக இருந்தது.

காமெடி கலந்த திரில்லர் படங்களை எடுக்கும் சுந்தர்.சி, லாரன்ஸை மிஞ்சும் அளவுக்கு இந்த படத்தின் டிரைலர் இருக்கிறது. ட்ரெய்லருக்கு கிடைத்த இதே வரவேற்பு படத்திற்கும் கிடைக்கும் என்று படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

lokesh-rolex

லோகேஷ் யுனிவர்சில், ரோலக்சை விட கொடூரமான வில்லன் இவர்தான்.. லோகி வெர்ஷன் 2.0 வைரலாகும் வீடியோ

Lokesh in 2.0 Version: சினிமா ஆரம்பித்து எத்தனையோ வருடங்களை தாண்டிய நிலையில் ஏகப்பட்ட இயக்குனர்கள் பல பிரம்மாண்டமான படங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் உள்ளே நுழைந்து நடிகர்களிடமும், மக்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொடுத்த இயக்குனர் யார் என்றால் அது லோகேஷ் தான். ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்கும் சம்பந்தப்படுத்தி அதில் ஒரு ட்விஸ்ட்டை வைத்து ஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்தை கொடுப்பதில் மிகப்பெரிய கில்லாடி என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்ட இவர் இதுவரை இயக்கிய கைதி, விக்ரம் மற்றும் லியோ படங்களில் விட்ட குறை தொட்ட குறையாக பல காட்சிகளையும், நடிகர்களையும் புரியாத புதிராக கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கைதி படத்தில் உள்ள டில்லி கேரக்டரையும் லியோ படத்தில் விக்ரம் மற்றும் கைதி படத்தையும் ஆங்காங்கே கொண்டு வந்திருக்கிறார்.

அந்த வகையில் இதில் துருப்பு சீட்டாக விட்டுட்டு போன எல்லா சீன்களையும் ஒட்டுமொத்தமாக கொண்டு வரும் படமாக லோகி வெர்ஷன் 2.0 என்ற வீடியோ இணையதளத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. இது முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக ராக்ஸ்டார் அனிருத் உருவாக்கின வீடியோவாக இருந்தாலும் பார்த்ததுமே மெய்சிலிர்க்கும் அளவிற்கு புல்லரித்து போகிறது.

அந்த அளவிற்கு ரசிகர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் லோகேஷ். அடுத்தபடியாக விக்ரம் படத்தில் கடைசி காட்சியில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யா தான் இருப்பதிலேயே முக்கியமான கொடூர வில்லன் என்று அனைவரும் நினைத்திருந்தோம். ஆனால் தற்போது என்னவென்றால் இவரை விட மிகக் கொடூரமான ஒரு வில்லன் இருக்கிறார் என்று லோகேஷ் கூறியிருக்கிறார்.

அந்த வகையில் இவர்களுக்கெல்லாம் வில்லாதி வில்லனாக இருக்கப் போவது யார் என்றால் லியோ தாஸ். சும்மா பெயரை கேட்டாலே அதிருதில்ல என்பதைப் போல ரோலக்சை விட லியோ கேரக்டர் இன்னும் வலுவாக அமையப்போகிறது. இதற்கிடையில் லோகேஷ் அளித்த ஒரு பேட்டியில் பொதுவாக நான் எடுக்கக் கூடிய எந்த படத்திலும் பிளாஷ்பேக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த வகையில் லியோ படத்தில் வந்த ஃபிளாஷ்பேக் சும்மா கற்பனை கதையாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்து லோகேஷ் எடுக்கக்கூடிய படங்களில் இதுக்கு ஒரு செக் வைக்க போகிறார். ஆக மொத்தத்தில் லோகியின் 2.0 வெர்ஷன் படத்தில் இன்னும் எதிர்பாராத பல திருப்பங்கள் நடக்கப்போகிறது.

thalapathy-68-pooja-video

இணையத்தை தெறிக்க விடும் தளபதி 68 பூஜை வீடியோ.. டி-ஷர்டில் கெத்து காட்டும் விஜய்

Thalapathy 68-Vijay: லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாகிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதில் விஜய் டி-ஷர்ட்டில் வந்து கெத்து காட்டி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தளபதி 68-ல் நடிக்கும் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், மலையாள நடிகர் ஜெயராம், விடிவி கணேஷ், யோகி பாபு, மேலும் வெங்கட் பிரபு குழுவில் உள்ள பிரேம்ஜி, வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் என மொத்த கூட்டமும் இந்த விழாவில் வருகை தந்திருந்தனர்.

அதேபோல் தளபதி 68 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி பூஜையில் கலந்து கொண்டார். மேலும் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளான சினேகா மற்றும் லைலா இருவரும் தளபதி 68 படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் இவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஏனென்றால் எப்போதுமே வெங்கட் பிரபு படம் என்றால் அதில் யுவன் சங்கர் ராஜா இசை தான் என்பது இந்த ஊர், உலகம் அறிந்த ஒன்று.

தளபதி 68-யில் பாடல்கள் தெறிக்க விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த பூஜை வீடியோவை தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது எக்ஸ் தளம் போன்ற இணையங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.