Rashmika

கார், பங்களாக்களை வாங்கி குவிக்கும் ரஸ்மிகாவின் சொத்து மதிப்பு.. ஆடம்பர ஆட்டத்தை உருவாக்கிய படம்

ராஷ்மிகா மந்தனா, தனது யதார்த்தமான நடிப்பினால் கன்னடம், தெலுங்கு தமிழ் என தென்னிந்தியாவின் பிசியான நடிகையாக மாறியுள்ளார்.

biggboss-archana-nixon

சும்மா இருந்த சிங்கத்த சுரண்டி விட்ட நிக்சன்.. செம பல்பு கொடுத்த அர்ச்சனா

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி 50ஆவது நாளை நெருங்க இருக்கும் நிலையில் ஆளாளுக்கு கன்டென்ட் கொடுக்கிறேன் என்ற பெயரில் எதையாவது செய்து கொண்டிருக்கின்றனர். அதில் இவ்வளவு நாள்

BB7

எனக்கு அந்த ஃபீலிங்ஸ் இருக்கு.. காதல் வலையை வீசிய பூர்ணிமா

BB7 Tamil Promo: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போனவாரம் இருந்த பரபரப்பு இந்த வாரம் சுத்தமாக இல்லை. கடந்த வாரம் முழுக்க சர்ச்சையும் சண்டையுமாக இருந்ததால் அதை பார்க்க விறுவிறுப்பாக இருந்தது. இந்த வாரம் வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் கொஞ்சிக் கொள்வதும், சமாதானம் செய்து கொள்வதும் பிக்பாஸுக்கு சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது என்று தெரிகிறது.

இவர்கள் இப்படி அன்பை பொழிந்து கொண்டால் முதலுக்கே மோசம் ஆகி விடும் என்பதை புரிந்து கொண்ட பிக் பாஸ் ரோல் பிளே டாஸ்கை கொடுத்து இருக்கிறார். நம்மை போல இன்னொருவர் நடிக்கிறார் என்று முகத்திற்கு முன்னாடி சந்தோஷப்பட்டாலும், கோபத்தில் பொசுங்குவது அவர்களின் முகத்தை நன்றாக பார்த்தாலே தெரிகிறது.

தினேஷுக்கு கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்கில் வசமாக சிக்கியது விஷ்ணு தான். விஷ்ணு, தினேஷை பார்த்து நரி என்று சொல்ல, தினேஷ் அமுல் பேபி என்று விஷ்ணுவை வச்சு செய்தார். ஒரு கட்டத்தில் விஷ்ணுவை இன்னும் அதிகமாக தூண்டி விட நினைத்த தினேஷ் ப்ரோமோ பொறிக்கி என்னும் வார்த்தையை சொன்னார். இதுதான் வாய்ப்பு என இன்றைய டாஸ்கில் தினேஷ் சொன்ன ப்ரோமோ பொறுக்கி வார்த்தையை ஒரு நூறு தடவைக்கு மேல் பூர்ணிமா உபயோகித்து விட்டார்.

தினேஷ் மற்றும் விஷ்ணுவை தூண்டிவிட தான் பூர்ணிமா இந்த வார்த்தையை உபயோகப்படுத்தினார். இன்று வெளியான மூன்றாவது ப்ரோமாவில் பூர்ணிமாவின் திட்டம் தெரியாமல் விஷ்ணு அந்த வார்த்தை தன்னை எவ்வளவு காயப்படுத்தியது என்று பூர்ணிமாவிடம் மனம் திறந்து பேசி இருக்கிறார். பூர்ணிமாவும் இதுதான் வாய்ப்பு என காதல் வலையை வீசுகிறார்.

நீங்கள் இப்படி இருப்பது தான் விஷ்ணு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று பூர்ணிமா சொல்கிறார். மேலும் தனக்கு மனதில் ஏதோ ஒரு ஃபீலிங் இருப்பதாகவும், நான் நினைப்பது உண்மை தானா என்றும் பூர்ணிமா விஷ்ணுவிடம் கேட்கிறார். பிக் பாஸ் இந்த வீடியோவுக்கு பின்னணியில் போடும் இசை, கண்டிப்பாக இது ஒரு காதல் கன்டென்ட் என்பதை உறுதி செய்து இருக்கிறது.

ஏற்கனவே இந்த சீசனில் போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு காதல் கண்டன்டு இருக்கிறது. இனி பூர்ணிமா மற்றும் விஷ்ணுவின் காதல் எல்லாம் பார்க்கும் அளவுக்கு யாருக்கும் தைரியம் கிடையாது. ஆக்ஷன் கன்டன்ட்டை மட்டுமே எதிர்பார்க்கும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது இந்த ப்ரோமோ.

biggboss-maya

கோல்ட் ஸ்டாரால் கொதித்துப் போன மாயா.. இது என்ன பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை

Biggboss 7: கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யம் குறைந்தது போல் காணப்படுகிறது. சென்ற வாரம் பிரதீப் ரெட் கார்டு விவகாரத்தை வைத்து போட்டியாளர்கள் தங்களுக்குள்