வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மணிவண்ணன், ரகுவரன் இறப்பின் பின்னணி.. மதுபோதையால் உயிர் பிரியல, அதிர்ச்சி தந்த ரிப்போர்ட்

Manivannan-Raghuvaran: பொதுவாக சினிமாவில் உச்சத்தில் உள்ள நடிகர்கள் திடீரென இறப்புச் செய்தி ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் மனோபாலா, மயில்சாமி போன்ற நடிகர்களின் இறப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் மணிவண்ணன் மற்றும் ரகுவரனின் இறப்பு பற்றி ஒரு போலி தன்மை இருந்து வருகிறது.

பன்முகத் தன்மை கொண்ட மணிவண்ணனின் இறப்பு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு. நல்ல இயக்குனர், நடிகர் என அவரது திறமையை வெளிக்காட்டும்படி பல விஷயங்களை செய்திருக்கிறார். இந்நிலையில் மது பழக்கத்தினால் தான் மணிவண்ணன் உயிரிழந்ததாக ஒரு செய்தி தற்போது வரை பரவி கொண்டிருக்கிறது.

ஆனால் அதற்கான உண்மையான காரணமே வேறு. அதாவது மணிவண்ணனின் அம்மாவின் இறப்பு அவரை மீள முடியாத துயரில் ஆழ்த்தியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அவரது மனைவியும் ஒரு வித நோயால் பாதிக்கப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார். மேலும் எதிர்பாராத விதமாக கழிவரையிலும் மணிவண்ணன் வழுக்கி விழுந்துள்ளார்.

Also Read : 31 ஆண்டுகளுக்கு முன் உலுக்கிய உண்மை.. ரகுவரனின் மனைவியுடன் மீண்டும் மனதை ரணமாக்க வரும் செங்கேணி

இதன் காரணமாகத்தான் மணிவண்ணனை இறப்பு சூழ்ந்துள்ளது. மேலும் அவர் இறப்பதற்கு 8 மாதத்திற்கு முன்பே மதுவை நிறுத்திவிட்டாராம். மேலும் சமீபத்தில் அவரது சகோதரி இதுகுறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதேபோல் இப்போது வரை வில்லன் நடிகர் என்றால் நமக்கு சற்று ஞாபகத்திற்கு வரும் சில முகங்களில் ரகுவரனின் முகமும் ஒன்று.

அவருடைய இறப்புக்கு மது தான் காரணம் என்று தற்போது வரை எல்லோருமே சொல்லுவதுண்டு. அந்த அளவுக்கு ஒரு காலகட்டத்தில் மதுக்க அடிமையாக இருந்தாலும் அதன் பிறகு தனது வயது காரணமாக மது அருந்துவதை தவிர்த்துவிட்டார். அவரும் மணிவண்ணன் போல ஒரு கட்டத்தில் கீழே விழுந்தது மற்றும் உடல்நிலை பிரச்சனை காரணமாகத்தான் ரகுவரன் உயிரிழந்தார்.

Also Read : மணிவண்ணன் வில்லன் அவதாரம் எடுத்த 5 படங்கள்.. ஜாதி வெறி பிடித்து பகையை உருவாக்கின சேனாதிபதி

Trending News