தொலைக்காட்சி

மகாநதி சீரியலில் காவிரி Rocked.. பசுபதி shocked

By · 25 ஜூன் 2025 · Updated 25 ஜூன் 2025
Cauvery Rocked in Mahanadi serial.. Pasupathi shocked

Mahanadhi : விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மகாநதி சீரியல் ஒரு வாரமாக ஒரே அறையில் இரண்டு பேர் மட்டுமே வைத்து கதையை அழகாக நகர்த்தி கொண்டு இருக்கும் இயக்குனர் அவர்கள் தற்போது காவேரியை விஜய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மகாநதி சீரியலில் காவிரிக்கு பெரியம்மை போட்டு வீட்டில் இருப்பது போலவும், அதற்கு உதவுவதற்காக விஜய் அவர்கள் காவிரி வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் காவிரி அறையில் உள்ளே இருக்கிறார், என்பது போல காட்சிகள் மிக அழகாகவும் நேர்த்தியான முறையில் நமக்கு கொடுத்திருந்தார் இயக்குனர்.

இதில் சின்ன சின்ன ரொமான்ஸ்கள், அதிக அக்கறைகள், கொஞ்சம் காமெடி என இந்த வார மகாநதி சீரியல் நன்றாகவே சென்றது. தற்போது காவேரி மொபைலில் youtube வீடியோவை பார்த்துவிட்டு காவேரிக்கு அம்மை போட்டுள்ளதால் காவேரி வயிற்றில் உள்ள குழந்தை பாதிக்கப்படும் என மிகவும் வருத்தப்பட்டாள்.

அதற்காக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஜய் காவிரியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து குழந்தை நன்றாக உள்ளது என்று தெரிந்த பின்னரே இரண்டு பேருக்கும் மகிழ்ச்சி. மருத்துவமனைக்கு சென்று திரும்ப வந்து கொண்டிருக்கும் விஜய் காவிரியின் காரை பசுபதி நோட்டமிட்டு போலீஸிடம் கூறவே போலீஸ் விஜயைத் தேடி காரின் பின்னாடியே துரத்திக் கொண்டு வருகின்றனர்.

காவிரி Rocked.. பசுபதி shocked…

பிறகு காரை மறைத்து விஜய் இங்கு இருக்கிறாரா என்று காவேரியிடம் கேட்கின்றனர். அதற்கு காவேரி இங்கே இல்லை என்று கூறுகிறார். பிறகு பசுபதியிடம் உனது திட்டம் பலிக்காது. உன்னை வச்சு செய்வதற்காக மூன்று ஹீரோசும் வரப் போகிறார்கள் என பசுபதியை நக்கலாக எச்சரித்து செல்கிறார் காவேரி. “த்ரீ ஹீரோஸ் ஆர் கமிங்” என கூறுகிறார்.

இந்த ப்ரோமோவை பார்த்தவுடன் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதிக்கின்றனர். சும்மாவே காவேரி பசுபதியை வச்சி செய்வார். இனி காவேரி மற்றும் 3 ஹீரோஸ் களமிறங்கி பசுபதிக்கு ஆட்டம் காண்பிப்பது நன்றாகவே இருக்கப்போகிறது. இவ்வாறாக இந்த வார கதைகளும் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.