தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பல்வேறு வழக்குகளில் சிக்கி சின்னாப்பின்னமாகி இருக்கின்றனர். அப்படி காவல்துறையால் வறுத்தெடுக்கப்பட்ட நடிகர்கள் மற்றும் திரைக்கலைஞர்களையும் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். சிலர் செய்த தவறுக்கு சரியாக சிக்கியும் சிலர் பாவம் செய்யாத தவறுக்கு சிக்கியும் இருக்கின்றனர்.
மன்சூர் அலிகான்: நடிகர் மன்சூர் அலிகான், மயக்க மருந்து கொடுத்து தன்னை கற்பழித்துவிட்டதாகவும், இதனால் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி ஒரு பெண் கடந்த 1998 ஆம் ஆண்டு கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வில், உடனே கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 லட்சம் ருபாய் அபராதமும் விதித்து நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. இதனை எதிர்த்து, நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன் பிறகு மனுவை விசாரித்த நீதிமன்றம், அந்த பெண்ணை பலமுறை அழைத்தும் அந்தப் பெண் விசாரணைக்கு வராதததால் தீர்ப்பு மன்சூருக்கு சாதகமானது. தனது பட வாய்ப்புகளை கெடுப்பதற்கு தான் இப்படி பொய் புகார் கொடுத்து என்னை மன உளைச்சல்களுக்கு ஆளாக்குகிறார்கள் என்று மன்சூர் அலிகான் மனுவில் கூறி இருந்தார்.
நடிகர் சுமன்: 1980களில் திரைத்துறையில் கால் பதித்த நடிகர் சுமன் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் சிவாஜி படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துப் பரவலானப் பாராட்டைப் பெற்றார். குருவி, ஏகன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இவர் 1985இல் ப்ளூ பிலிம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு இவரது நண்பர் திவாகரோடு சேர்த்து கைது செய்யப்பட்டார். பல சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், ப்ளூ பிலிம் எடுத்ததாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் இவர் அதை செய்யவில்லை, இவர் நண்பர் திவாகர் தான் அந்த தவறை செய்தார் என்று நீதி மன்றத்தில் பல முன்னணி வக்கீல்களை ஆஜர்படுத்தி பின் இவர் காரில் இருந்த கேசட்டுக்கும், இவருக்கும் எந்த தொடர்புமில்லை என்று நிரூபிக்கப்பட்டு பின் விடுதலை ஆனார்.
எம்.ஆர்.ராதா: தமிழகத்தை அதிர வைத்த ஒரு சம்பவம் என்றால், அது எம்ஜிஆர் மீது நடந்த துப்பாக்கி சூடுதான். 1967-ம் ஆண்டு ஒரு நாள் மாலை 5 மணியளவில், எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது ஏற்பட்ட தகராறால், எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டார். ராதாவின் உடலிலும் இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து ராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் அவர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் நடந்த நீதிமன்ற விசாரணையில், எம்.ஆர்.ராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்தது.
ஆபாவாணன்: தமிழ் சினிமாவில் ஊமை விழிகள், உழவன் மகன், செந்தூரப்பூவே, இணைந்த கைகள் ஆகிய படங்களை தயாரித்தவர் ஆபாவாணன். இவர் கடந்த 1999ம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் காசோலை செலுத்தி பணம் பெறுவதில், வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2016ம் ஆண்டு ஜூன் மாதம் அந்தத் தீர்ப்பு வெளியானது. மோசடியில் ஈடுபட்ட ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், அபராதமும்,விதிக்கப்பட்டது. அதன்படி மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையை புழல் சிறையில் அனுபவித்து விட்டார் ஆபவாணன்,
பவர் ஸ்டார்: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர்தான் பவர் ஸ்டார் சீனிவாசன். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆர்.பி.எசு இன்டர்நேசனலின் உரிமையாளரான ஜி. யு. பாலசுப்பிரமணியனை ஏமாற்றி மோசடி செய்ததற்காக சீனிவாசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பாலசுப்பிரமணியனின் சொன்னபடி ,சீனிவாசன் தனக்கு 10 கோடி ரூபாய் தர உறுதியளித்ததாகவும் அதற்கு சேவைக்கட்டணமாக 65 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும். ஆனால் கடனையோ சேவைக்கட்டணத்தையோ தரவில்லை எனக்கூறினார். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் சீனிவாசன் பிணையில் விடுதலையானார்.அதன் பின்பு அவர் அதிகமாக படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.