Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நெல்லுக்கு பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் போகுது.. கூலி படத்திற்கு ப்ரமோஷன் செய்யும் பிரபலங்கள்

நெல்லுக்கு பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் போகுது.. கூலி படத்திற்கு ப்ரமோஷன் செய்யும் பிரபலங்கள்

Coolie : லோகேஷ் கனகராஜ், ரஜினி கூட்டணியில் உருவாகியிருக்கும் கூலி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மற்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் இணைந்திருக்கின்றனர். இந்த சூழலில் கூலி படத்தை பற்றிய நிறைய செய்திகள் […]

Coolie : லோகேஷ் கனகராஜ், ரஜினி கூட்டணியில் உருவாகியிருக்கும் கூலி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மற்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் இணைந்திருக்கின்றனர்.

இந்த சூழலில் கூலி படத்தை பற்றிய நிறைய செய்திகள் இப்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒருபுறம் வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா படம் வெளியாக இருக்கிறது.

இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நாகர்ஜுனா கூலி படத்தை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை கூறி வருகிறார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. மற்றொருபுறம் இதே ஜூன் 20ஆம் தேதி பாலிவுட் நடிகர் அமீர்கானின் சிதாரே ஜமீன் பர் படம் வெளியாக இருக்கிறது.

கூலி படத்திற்கு ப்ரமோஷன் செய்யும் பிரபலங்கள்

இதற்காக தமிழ் ஊடகங்களுக்கும் அமீர்கான் பேட்டி கொடுத்து வருகிறார். இவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தில் இணைய இருக்கிறார். இந்த சூழலில் கூலி படத்தில் நடித்த அனுபவத்தையும் அமீர்கான் கூறி வருகிறார். இதுவே படத்திற்கு ப்ரமோஷன் ஆக அமைந்து வருகிறது.

நாகார்ஜுனா மற்றும் அமீர்கான் வேறு படங்களின் ப்ரோமோஷனில் கூலி படத்தை பற்றி தான் நிறைய பேசுகிறார்கள். நெல்லுக்கு பாய்ச்சிற தண்ணீர் புல்லுக்கும் பாய்வது போல் ஃப்ரீயாகவே கூலி படத்திற்கான ப்ரோமோஷனை செய்து வருகின்றனர்.

மேலும் கூலி படம் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ரஜினி இந்தப் படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு லோகேஷை பாராட்டியிருக்கிறார். மேலும் இந்த படத்தைப் பற்றிய நிறைய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வரவுள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.