மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ஆம் தேதி பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. ஆகையால் இப்போதே படத்திற்கான பிரமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள சோழா சோழா என்ற பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
Also read : பொன்னியின் செல்வனில் மிரட்டும் 10 கதாபாத்திரங்கள்.. ஒவ்வொருத்தராய் பார்த்து செதுக்கிய மணிரத்தினம்
இந்த விழாவில் தெலுங்கு திரைத்துறையைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர். அப்போது அந்த விழா மேடையில் பேசிய மணிரத்தினம் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு நன்றி கூறினார். ஆனால் அவரைப் பற்றி வேறு எதுவும் பேசவில்லை. இந்நிலையில் தற்போது தான் மணிரத்தினம் சிரஞ்சீவிக்கு நன்றி சொன்னதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
அதாவது பொன்னியின் செல்வன் படத்தின் தமிழ் பதிப்பில் கமலஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். அதேபோல் தெலுங்கு பதிப்பில் சிரஞ்சீவி குரல் கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இப்படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார்.
Also read : மணிரத்னத்தை வச்சு செய்யப் போகும் விக்ரம்.. ஆப்பை திருப்பி கொடுக்குற நேரம் வந்தாச்சு
அந்த வகையில் எல்லா மொழிகளிலும் மிகவும் பரிட்சயமான பிரபலங்களை தேர்ந்தெடுத்த படத்தின் கதைக்கு குரல் கொடுக்க வைத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்திற்கு நாலாபக்கமும் வசூல் மழை கொட்டும் என மணிரத்னம் பலே திட்டம் போட்டுள்ளார்.
மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் நேற்று வெளியான நிலையில் அதிக ரசிகர்கள் இப்பாடலை கேட்டு வருகின்றனர். இப்படத்திற்கு ஏஆர் ரகுமானின் இசை முக்கிய பலமாக அமைந்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தை பற்றிய சுவாரசியமான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Also read : தமிழ் சினிமா பக்கமே வர மறுக்கும் இசைப்புயல்.. ஏ ஆர் ரகுமானையும் விட்டுவைக்காத சூழ்ச்சி