சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

டிடி-யை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய பிரபலம்.. விஜய் டிவி தொகுப்பாளினா இது தான் நிலைமை போல

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொலைக்காட்சியில் சின்னத்திரை ரசிகர்களை மகிழ வைத்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கின்ற டிடி-க்கு என்ற தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர் முன்பு போல் தொடர்ந்து அவரால் ஒரே இடத்தில் நிற்க முடியாத அளவுக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டதால் விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்பட ப்ரோமோஷன் நேர்காணலின் மட்டுமே தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் கோலிவுட்டில் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதிலும் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் டிடி நடித்துள்ளார். இவ்வாறு டிடி-க்கு பிறகு தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அடுத்த தொகுப்பாளினி யார் என்றால் அது பிரியங்கா தான்.

இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு என முன்னணி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, அந்த நிகழ்ச்சியில் காமெடி, கலாட்டா, அலப்பறைக்கு பஞ்சமில்லாமல் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து வரை சென்ற டிடி-யை போலவே தற்போது பிரியங்கா விவாகரத்து சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்.

பிரியங்கா 2011-ம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிரவீன் விஜய் டிவியின் தயாரிப்பு நிறுவனத்தில் ஒருவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பிரியங்காவிற்கும் பிரவீனுக்கும் விவாகரத்து ஆக உள்ளதாக கடந்த சில நாட்களாக சர்ச்சைகள் கிளம்புகிறது. இதற்கு பிரியங்கா நான்கே வார்த்தையில் நச்சுனு பதிலளித்துள்ளார்.

‘நம்மளை புரிந்து கொள்ளும் கணவன் இருந்தால் அவர்களுக்கு விசுவாசமாக இருந்துவிட்டால் எந்தவித பிரச்சினையும் வராது. அந்த பிரச்சினைகளை பற்றி கவலை படவும் அவசியமில்லை’ என்று தன்னுடைய கணவருக்கும் தனக்கும் இடையிலான உறவில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று அவருடைய விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பொதுவாக சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு இந்த பிரச்சனை வருவது சகஜம் தான். அதுவும் தொகுப்பாளினி என்றாலே இதுபோன்ற கட்டுக்கதை எல்லாம் எளிதாக உருவாகும் என பல நாளாகவே கிசுகிசுக்கப்பட்ட விவாகரத்து குறித்த சர்ச்சையை ரசிகர்களுடன் உரையாடுவதன் மூலம் அதைக் குறித்து உடைத்துப் பேசி தெளிவுபடுத்தியுள்ளார்.

Trending News