வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வேட்டையனை வேட்டையாட காத்திருக்கும் சந்திரமுகி.. ஜோதிகாவையே மிரட்டும் கங்கனா போஸ்டர்

Chandramukhi 2 – Kangana Ranaut Look: 90ஸ் கிட்ஸ் களின் ஆல் டைம் பேவரைட் படமாக இருப்பது சந்திரமுகி. இந்த படம் கடந்த 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி இருந்தாலும் கிட்டத்தட்ட இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதே வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமா கேரியரை தூக்கிவிட்ட படம் என்று கூட இதை சொல்லலாம்.

சந்திரமுகி படத்தில் ஒரு சில வினாடிகளே வந்தாலும் வேட்டையன் ராஜா கேரக்டர் அப்போதே மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டது. அதேபோன்றுதான் சந்திரமுகியின் கேரக்டரும். அப்படி இருக்கும் போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்றதும் அதில் ரஜினி இல்லாதது பெரிய வருத்தமாக இருந்தது. இருந்தாலும் கடந்த வாரம் வெளியான ராகவா லாரன்ஸ் லுக்கை பார்த்துவிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

Also Read: கொலை நடுங்க வைக்கும் சந்திரமுகி 2.. முதல் முறையாக வெளிவந்த விமர்சனம்

இந்நிலையில் படத்தின் முக்கிய கேரக்டரான சந்திரமுகியின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படுவதாக சமீபத்தில் அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. இன்று லைக்கா பட தயாரிப்பு நிறுவனம் சந்திரமுகியின் லுக்கை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. நடிகை கங்கனா ரணாவத்தான் சந்திரமுகியாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

                                                                        சந்திரமுகியின் பர்ஸ்ட் லுக்

Kangana First look
Kangana First look

இந்த லுக்கில் கங்கனா பச்சை கலருடன் தங்க ஜரிகை நிறைந்த புடவையில் ஒரு பழங்கால ராணியின் தோற்றத்தோடு இருக்கிறார். ஆடை அணிகலன்களில் ராணியின் தோற்றம் இருந்தாலும் கண்களில் சோகம் மற்றும் கோபம் இரண்டையும் காட்டும் முகபாவனையில் எந்த சலனமும் இல்லாமல் ஒரு அறையில் நிற்பது போல் புகைப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

சந்திரமுகி 2 படத்தின் கதை, ஏற்கனவே முதல் பாகத்தில் சொல்லப்பட்ட வேட்டையன் ராஜா, சந்திரமுகியை கடத்தி வருவது, சந்திரமுகியின் காதலன் குணசேகரன் அந்த அரண்மனையின் அருகிலேயே இருப்பது, இதை கண்டுபிடித்து வேட்டையன் இருவரையும் துடிதுடிக்க கொலை செய்வது என அந்த ஃப்ளாஷ்பேக்கில் நடந்ததை வைத்து சொல்லப்பட்ட திரை கதையாக இருக்குமா, அல்லது முற்றிலும் மாறுபட்டு இருக்குமா என தெரியவில்லை.

இயக்குனர் பி வாசுவுக்கு சந்திரமுகி படத்திற்கு பிறகு அந்த அளவுக்கு வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. எனவே அதன் இரண்டாம் பாகத்தையே மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மைசூர் மற்றும் சென்னையில் நடைபெற்றது. சந்திரமுகி 2 திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

Also Read: பயந்து வேண்டாம் என பதறிய சூப்பர் ஸ்டார்.. பறிபோன 2 உயிர்களால் சந்திரமுகி- 2வை மறுத்த ரஜினி

Trending News