வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

17 வருஷத்திற்கு பிறகு மறுபடியும் ரிப்பீட்டு.. வெளியானது சந்திரமுகி 2 ட்ரெய்லர்

Chandramukhi 2 Trailer: கடந்த 17 வருடங்கள் கழித்து மறுபடியும் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் சந்திரமுகி 2. முதல் பாகத்தில் வேட்டையனாக ரஜினி நடித்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இன்று அந்த படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த ட்ரெய்லரில் வேட்டைய ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். இவர்களுடன் சுரேஷ் சந்திரா மோகன், ரவி மரியா மற்றும் ராதிகா சரத்குமார், சிருஷ்டி டாங்கே, லக்ஷ்மி மேனன், வடிவேலு உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Also Read: மக்களுக்கு சேவை புரிய கடவுள் தன்னை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.. பட ரிலீஸ் டைம்ல உருட்டும் லாரன்ஸ், விளாசிய ப்ளூ சட்டை

படத்தை லைக்கா மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இதில் 200 வருடத்து பகையை சந்திரமுகி தீர்த்துக் கொள்வதாக படத்தின் கதையை உருவாக்கி இருக்கின்றனர். முதல் பாகத்தில் இருந்த டயலாக் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகிறது.

இதனால் வடிவேலுவே, ‘17 வருஷத்திற்கு பிறகு மறுபடியும் ரிப்பீட்டு’ என்று ட்ரெய்லரில் கலாய்த்துள்ளார். வேட்டையனாக சூப்பர் ஸ்டாரை பார்த்த ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸை அந்த கெட்டப்பில் பார்க்கும் போது ஏதோ மிஸ் ஆகிறது போன்ற பீல் ஏற்படுகிறது.

Also Read: கைகலப்புடன் முடிந்த சந்திரமுகி 2 விழா.. லாரன்ஸ்சை போல் விழி பிதுங்கி நிற்கும் அட்லீ

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் பங்களாவில் தான் சம்பவங்கள் நிகழ்வது போல் கதையை நகர்த்துகின்றனர். முதல் பாகத்தில் எப்படியோ அதே போல் இரண்டாம் பாகத்திலும் வடிவேலுவின் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதை ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.

சந்திரமுகி 2 டிரைலர் இதோ!

Trending News