ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

2024 பாஜக வேட்பாளராக களம் இறங்கும் சந்திரமுகி.. இருக்கிற இடம் தெரியாமல் போகப் போகும் குஷ்பூ

Chandramukhi Actress: சினிமாவில் கொடிகட்டி பறந்த குஷ்பூ அரசியல் ஆசையில் திமுக கட்சியில் இணைந்தார். ஆனால் சில சலசலப்பின் காரணமாக திடீரென காங்கிரஸ் கட்சிக்கு தாவினர். ஆனால் அங்கும் நீடிக்காமல் தற்போது அவர் பாஜக கட்சியில் இணைந்து இருக்கிறார்.

இப்படி கட்சி விட்டு கட்சி தாவிய குஷ்பூ கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜக வேட்பாளராக தேர்தலிலும் களம் கண்டார். ஆனால் அவருக்கு தோல்விதான் மிஞ்சியது. அதை தொடர்ந்து தற்போது தேசிய மகளிர் ஆணையர் உறுப்பினராக இருக்கும் இவர் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை கூறி சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார்.

இந்த சூழலில் இவரை ஓரம் கட்ட ஒரு நடிகை தயாராகி இருக்கிறார். வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் பாஜக வேட்பாளராக வரப்போவது தற்போது உறுதியாகி இருக்கிறது. அதன்படி பாலிவுட்டின் பிரபல ஹீரோயினான கங்கனா சந்திரமுகி 2 படத்திலும் நடித்திருந்தார்.

Also read: ஜோதிகா எல்லாம் ஒண்ணுமே இல்ல, கங்கனாவுக்கு லாரன்ஸ் மாஸ்டர் போட்ட சோப்பு.. நச் பதிலடி கொடுத்த ஜோ

ஆனால் அது அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த சூழலில் தற்போது அவர் அரசியலில் கால் பதிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். ஏற்கனவே இது குறித்த செய்திகள் அரசல் புரசலாக பேசப்பட்டது. மேலும் கங்கனாவும் மனதில் பட்டதை தைரியமாக பளிச்சென்று பேசக்கூடியவர்.

அதனாலேயே இவர் அரசியலுக்கு வருவது வரவேற்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கங்கனா பாஜக வேட்பாளராக மக்களவைத் தேர்தலில் களம் இறங்குவார் என அவருடைய தந்தை அமர்தீப் தெரிவித்துள்ளார். இது தற்போது பரபரப்பை கிளப்பிய நிலையில் குஷ்பூவின் இடம் ஆட்டம் கண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது திரையுலக வட்டாரம்.

Also read: 53 வயதிலும் இளமை மாறாமல் குஷ்பு வெளியிட்ட வைரல் புகைப்படம்.. உங்களுக்கு கோயில் கட்டுனது தப்பே இல்ல!

Trending News