கூலி டைட்டிலில் ஏற்பட்ட சிக்கல்.. பெயரை மாற்றிய படக்குழு

Rajini : லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி கூட்டணியில் கூலி படம் உருவாகி வருகிறது . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா என பல பெரிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்த சூழலில் ஆகஸ்ட் மாதம் கூலி படம் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் கூலி டைட்டிலில் இப்போது சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாகவே ரஜினி பட டைட்டிலை மற்ற நடிகர்கள் வைப்பது தான் வழக்கம். அதுவும் குறிப்பாக தனுஷ் தனது படங்களில் ரஜினி டைட்டிலை வைத்து வந்துள்ளார்.

பொல்லாதவன், படிக்காதவன், தங்கமகன் என பல படங்கள் ரஜினியின் டைட்டிலில் தான் தனுஷ் நடித்திருக்கிறார். இப்படி இருக்கையில் ரஜினி படத்தின் டைட்டிலில் பிரச்சனை வந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

மாற்றப்பட்டுள்ள கூலி டைட்டில்

கூலி படம் 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. ஹிந்தியில் இந்தப் படத்தை கூலி என்ற தலைப்பில் வெளியிட சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது ஏற்கனவே அமிதாபச்சன் நடிப்பில் கூலி என்ற படம் 1983இல் வெளியாகி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2020 ஆம் ஆண்டில் வருண் தவான் கூலி நம்பர் ஒன் என்ற டைட்டிலில் நடித்திருக்கிறார். மீண்டும் கூலி என்ற டைட்டிலில் அங்கு படம் வெளியாகுவது பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால் டைட்டிலை மாற்றி வெளியிடுகின்றனர்.

அதாவது Makadoor என்ற தலைப்பில் தான் ஹிந்தியில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த டைட்டில் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஆனாலும் வேறு வழி இல்லாமல் படக்குழு டைட்டிலை மாற்றியுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →