Tamilnadu: தனியார் வாகனங்களில் ஊடகம், மருத்துவர், வழக்கறிஞர், ஆர்மி, போலீஸ் என ஒட்டி இருக்கும் ஸ்டிக்கர்களை மே 1ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.
இதற்கு மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கம் விதிவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அதில் மருத்துவர்கள் ஒரு நோயாளியின் உயிரை காப்பாற்ற அவசரமாக செல்லும்போது காவல்துறை நிறுத்தி விசாரித்தால் வேலை தாமதமாகும்.
அதன் காரணமாக நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதனால் இந்த ஸ்டிக்கர் ஒட்டுவதில் திருத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு தற்போது காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளனர்.
காவல்துறை விளக்கம்
அதன்படி இது போன்ற ஸ்டிக்கர்கள் ஓட்டுவதால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சிலர் குற்ற செயல்களில் ஈடுபட்டு அதிலிருந்து தப்பிக்க போலியான ஸ்டிக்கர்களை ஒட்டி காவல்துறையின் கவனத்தை திருப்பி விடுகின்றனர்.
இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும். அதை தடுப்பதற்காக தான் இந்த மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை வாகனங்களில் யாரும் ஒட்டக்கூடாது.
மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதுதான் குற்ற செயல்களை தடுக்கவும் முடியும். இதற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து எங்களுக்கு ஒத்துழைப்பு வேண்டும் என தெரிவித்துள்ளனர்.