Memes: திங்கட்கிழமை சென்னை மக்கள் இதுவரை இல்லாத பரபரப்பில் இருந்தனர். காரணம் அடுத்த நான்கு தினங்களுக்கு மழை வெளுத்து வாங்க போகிறது ரெட் அலர்ட் என வந்த செய்திகள் தான்.
அரசாங்கமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்ததில் ஆரம்பித்து பேரிடர் குழுவும் தயார் நிலையில் இருந்தது. இதையெல்லாம் தாண்டி வேளச்சேரி மக்கள் மேம்பாலத்தில் காரை நிப்பாட்டி அட்ராசிட்டி செய்ததுதான் வேற லெவல் சம்பவம்.
அதேபோல் கிலோ கணக்கில் காய்கறி, சப்பாத்தி மாவு, பஜ்ஜி மாவு, பிரட், பால் என முடிந்த அளவு பொருட்களை வாங்கி ஸ்டோர் செய்து வைத்தனர் இல்லத்தரசிகள். ஆனால் இது எதற்குமே வேலையில்லாமல் போய்விட்டது.
ஒரு வாரம் மழை என நாம் நினைத்தால் ஒரே நாளில் டாட்டா காட்டி சென்று விட்டது கனமழை. நீங்க நினைக்கும் போது நான் வந்தா அப்புறம் எனக்கு என்ன மருவாதி என்ற ரேஞ்சுக்கு தற்போது அது ஆந்திரா பக்கம் சென்று விட்டது.
உன்ன நம்பி காரை மேம்பாலத்தில் நிப்பாட்டி பைன் கட்டிருக்கோம். ரெண்டு மாசத்துக்கு தேவையான பொருளை இப்பவே வாங்கி வச்சிருக்கோம். ஆனா நீ மரியாதை இல்லாம ஆந்திரா பக்கம் போயிட்டியே என நெட்டிசன்கள் குறும்பாக மழை மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல் அக்டோபரில் வந்துட்டா என்னோட கெத்து என்ன ஆகிறது. என்னோட டார்கெட் டிசம்பர் தான் என மழை சொல்வது போல் பல மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது. இப்படி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை மீம்ஸ் தொகுப்பு இதோ.