Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழன் உண்மையிலேயே நமக்கு நல்லது செய்திருக்கிறார் என்று நிலா நம்பி கொண்டிருக்கிறார். ஆனால் சுயநலமாக இருந்த சோழன், நிலாவை காதலித்ததால் தான் எல்லா உதவியும் செய்து கல்யாணம் பண்ணி இருக்கிறார் என்பதை உணரவில்லை.
கல்யாணமும் இது நிஜக் கல்யாணம் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலா எப்படியாவது இந்த வீட்டை விட்டு சென்று ஹாஸ்டலுக்கு போக வேண்டும் என்று முடிவு பண்ணினார். ஆனால் ஹாஸ்டல் கிடைக்காத பட்சத்தில் தற்போது சோழன் வீட்டிலேயே தங்கி வருகிறார்.
அந்த வகையில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து சாப்பிடுவது, பெருசாக எதையும் நினைத்து கவலைப்படாமல் சந்தோஷமாக இருப்பது போன்ற எல்லா விஷயத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் நிலா கொஞ்சம் கொஞ்சமாக அந்த குடும்பத்தில் ஒருவராக மாறிக்கொண்டே வருகிறார்.
அதனால் தற்போது சேரன் இடம் நல்லா பேசிக்கொண்டு வருகிறார். அத்துடன் பல்லவனுடன் சேர்ந்து பல்லவன் மனதில் இருக்கும் பாரத்தை கொட்டும் விதமாக நான் மட்டும்தான் இந்த வீட்டில் இதுவரை தனியாக இருந்து சுவற்றைப் பார்த்து பேசிக் கொண்டு வந்தேன்.
நல்ல வேலை நீங்க எங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்ததால் எனக்கு பேசுவதற்கு ஒரு ஆளு கிடைச்சிருக்கு என்று சொல்லியதால் நிலா கொஞ்சம் செண்டிமெண்டாக ஃபில் பண்ண ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் தற்போது சேரன் மற்றும் பல்லவன், நிலா மனசில் இடம் பிடித்து விட்டார்கள்.
அதே மாதிரி பாண்டியனும், அண்ணி என்று தெரியாமல் தவறாக திட்டிவிட்டார். பிறகு செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் விதமாக ஒரு கிப்ட்டை கொடுத்து நிலாவிடம் அண்ணி என்கிற உரிமையை பெற்றுக் கொண்டார். ஆனால் சோழன் மட்டும் இன்னும் பொய் சொல்வதை நிறுத்தாமல் பொய்க்கு மேல் பொய் சொல்லி நிலவை ஏமாற்றி வருகிறார்.
அந்த உண்மை எல்லாம் தெரிந்தால் நிச்சயம் சோழனை விட்டு உடனடியாக போய்விடவும் வாய்ப்பு இருக்கிறது. அதற்குள் சோழன் எல்லா உண்மையும் சொல்லி நிலா மனசில் ஒரு காதலை ஏற்படுத்தி விட்டால் நிச்சயம் நிலா அந்த குடும்பத்திற்கு ஏற்ற அண்ணியாக மாறி விடுவார்.