ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரீ என்ட்ரி கொடுக்கப்போகும் சேரன்.. உருவாக உள்ள பிரம்மாண்ட ஹிட் படத்தின் 2ம் பாகம்

தமிழ் சினிமாவில் 80, 90, காலகட்டத்தில் பிரபலமாக வலம்வந்த இயக்குனர்கள் நடிகர்கள் சில பல காரணங்களால் சினிமாவை விட்டு விலகியிருந்தனர். அப்படிப்பட்டவர்கள் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து வருகின்றனர். முக்கியமாக இயக்குனர்களான பாரதிராஜா, பார்த்திபன் உள்ளிட்டோர் வரிசையில் தற்போது இயக்குனர் மற்றும் நடிகரான சேரன் ரீ-எண்ட்ரி கொடுத்து வருகிறார்.

தற்போது இவர் இயக்கத்தில் உருவாகவுள்ள வெப்சீரிஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. 1997 ஆம் ஆண்டு நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் மற்றும் நடிகை மீனாவின் நடிப்பில் வெளியான பாரதிகண்ணம்மா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சேரன்.

பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப் , தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த சேரன் தமிழ் சினிமாவின் என்றும் அழிக்க முடியாத இயக்குனராக பெயர் எடுத்தார். இந்த நிலையில் சேரனின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவியதால் கடனில் அவதிப்பட்டார். அதுமட்டுமின்றி அவரின் குடும்ப வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள் இருந்து வந்தது.

இதனிடையே சேரன் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கியே இருந்தார். மேலும் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்றுக் கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை லாஸ்லியா, சேரனை சேரப்பா,சேரப்பா என்று அழைத்து அவரை பிரபலப்படுத்தினார்.

இதனிடையே இந்நிகழ்ச்சியில் சேரன் ஓரளவு பிரபலம் அடைந்த நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் மேற்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர், ராஜாவுக்கு செக், திருமணம், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட குடும்ப கதைகளை மையமாகக் கொண்டு திரைப்படங்களை இயக்கினார்.

மேலும் இத்திரைப்படங்களில் நடித்தும் அசத்தினார். இதனிடையே தற்போது 2004ஆம் ஆண்டு வெளிவந்த ஆட்டோகிராப் திரைப்படத்தின் கதையை போலவே வெப்சீரிஸ் இயக்கப்போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 2004ஆம் ஆண்டு சேரன், சினேகா,கனிகா, கோபிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஆட்டோகிராப் திரைப்படம் பட்டித் தொட்டியெங்கும் களைகட்டியது.

தேசிய விருது, தமிழ்நாடு ஸ்டேட் விருது உள்ளிட்ட விருதுகளை அள்ளிக் கொடுத்த இத்திரைப்படத்தின் கதையை பார்க்கும் நம் எல்லோருக்கும் கண்ணீர் வரும். சிறுவயது காதல் முதல் திருமணம் வரை சேரன் பார்த்த பெண்களின் காதலையும், நட்பையும் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் மூலமாக அழகாக சொல்லியிருப்பார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பாணியில் ஒரு வெப்சீரிஸை இயக்க உள்ளார் சேரன்.

Trending News