வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

செழியன் செய்த செயல்.. பதறிப்போன பாக்கியா குடும்பம்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கோபி திட்டமிட்டு செயல் படுத்திக் கொண்டிருக்கிறான்.

இந்நிலையில் கோபியின் மகன் செழியன் மற்றொருபுறம் தன்னுடைய மனைவி ஜெனியை அழைத்துக்கொண்டு தனிக்குடித்தனம் போக வேண்டும் என அலுவலகத்திற்கு அருகே வீடு பார்த்துக் கொண்டிருக்கிறான். இதுபற்றி பலமுறை ஜெனியிடம் செழியன் பேசியிருக்கிறான்.

ஆனால் செழியனின் இந்த முடிவுக்கு ஜெனி ஒத்துழைக்காததால் ஜெனியின் அப்பா அம்மாவை வரவழைத்த அவர்கள் மூலமாக ஜெனியை சம்மதிக்க வைக்க முயற்சிக்கிறான். ஆனால் ஜெனிக்கு இதில் துளி கூட இஷ்டமில்லை.

அத்துடன் பாக்யா வீட்டில் பல பிரச்சனைகளை சமாளிக்கும் போது புதிதாக செழியன் தனியாக செல்வது, பாக்கியலட்சுமி குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மனக் கஷ்டத்தை ஏற்படுத்த உள்ளது. மேலும் ஜெனியும் வீட்டில் இருப்பவர்களுடன் நெருங்கிப் பழகியதால் அவர்களைவிட்டு அவ்வளவு சீக்கிரம் தனியே செல்ல மாட்டார்.

இருப்பினும் எப்பொழுதுமே சுயநலமாக யோசிக்கும் செழியன், தற்போது வீட்டிலிருந்தால் தாத்தாவின் மருத்துவ செலவிற்கு மாதாமாதம் அதிக பணம் தன்னுடைய அம்மா வாங்கி விடுவார் என்ற எண்ணத்திலும் ஜெனி எப்பொழுதுமே வீட்டைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பதால் தன்னிடமே அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற நோக்கத்திலும் செழியன் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

ஆகையால் வீட்டில் பக்கவாதம் ஏற்பட்ட கோபியின் அப்பாவை எப்படி சரி செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கும் பாக்யாவிற்கு செழியனின் இந்த முடிவு பேரிடியாக விழப்போகிறது.

Trending News