வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

47 நிமிடத்தில் ரஞ்சிதமே ரெக்கார்டை உடைத்த சில்லா சில்லா.. சபாஷ் சரியான போட்டி

9 வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக் கொள்ளும் தல, தளபதி இருவரின் படங்களின் பாடல்கள் தற்போது வரிசையாக வெளியாகி கொண்டிருக்கிறது. அதில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்திலிருந்து 2 பாடல்கள் இதுவரை வெளியாகி விட்டது. அதில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான வாரிசு முதல் பாடலான ரஞ்சிதமே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதில் விஜய், ராஷ்மிகா மந்தனா இருவரும் சேர்ந்து குத்தாட்டம் போட்ட அந்த பாடல் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்தது. அதன் பிறகு சிம்புவின் குரலில் வெளியான தீ தளபதி பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் ரஞ்சிதமே பாடலுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு இருக்கிறது.

Also Read: கண்டுகொள்ளாமல் திராட்டில் விட்ட அஜித்.. சம்பளம் இல்லாமல் சிம்பு பாடிய தீ தளபதி பாடலின் முழு ரகசியம்

இந்நிலையில் அந்தப் பாடலை அஜித்தின் சில்லா சில்லா பாட்டு ஓரம் கட்டி இருக்கிறது. அனிருத் பாடி இருக்கும் இந்த பாடல் தற்போது தல ரசிகர்களின் ஃபேவரிட் பாடலாக மாறிவிட்டது. இந்தப் பாடலில் அஜித் இறங்கி குத்தாட்டம் போட்டு இருக்கிறார். இதில் அஜித் தனக்கே உரித்தான செம ஸ்டைலில் குரூப் டான்ஸர்களுடன் ஆட்டம் போட்டு இருக்கிறார்.

இந்த பாடல் தான் இப்போது எல்லா விழாக்களிலும் முக்கிய பாடல்களாக இளசுகளின் ஃபேவரிட் சாங் லிஸ்டில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. அதிலும் இந்தப் பாடல் வெளியான 24 மணி நேரத்தில் விஜய் ரஞ்சிதமே பாடலின் சாதனையை முறியடித்து இருக்கிறது.

Also Read: உச்ச கட்ட டென்ஷனில் வாரிசு, துணிவு.. பழசை கிளறி மூட்டிவிடும் ப்ளூ சட்டை மாறன்

விஜய்யின் ரஞ்சிதமே பாடல் வெளியான 1 மணி நேரத்தில் 5 லட்சம் லைக்குகளை பெற்றது. ஆனால் சில்லா சில்லா பாடல் 47 நிமிடங்களிலேயே 5 லட்சம் லைக்குகளை பெற்று சாதனை படைத்திருக்கிறது. அந்த வகையில் அஜித், விஜய்யை பின்னுக்கு தள்ளி முன்னேறி இருக்கிறார்.

இதனால் அஜித் ரசிகர்கள் இந்த வெற்றியை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். எனவே படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அஜித்தின் துணிவு படம் வாரிசு படத்தை ஓரம் கட்டி இருப்பதால், பாடல் மட்டுமல்ல படமும் சூப்பர் என சொல்லிக் கொள்வதற்காக தல ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

Also Read: துணிவை துணிந்து அடிக்க காத்திருக்கும் வாரிசு.. ஆடியோ பங்ஷனுக்கு மட்டும் இத்தனை கோடிகளா?

Trending News