செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

சிரஞ்சீவி நடித்த 4 சூப்பர் ஹிட் படங்கள்.. 47 நாட்களிலேயே எடுத்த சபதத்தை முடித்த மெகா ஸ்டார்

தெலுங்கில் மெகா சூப்பர் ஸ்டார் என கொடி கட்டி பறந்த சிரஞ்சீவி-க்கு என்றே தமிழ் ரசிகர்களும் உண்டு. அதிலும் இவர் ஆரம்ப காலத்தில் நடித்த 4 தமிழ் படங்கள் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

நாற்பத்தி ஏழு நாட்கள்: 1981 ஆம் ஆண்டு இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இதில் சிரஞ்சீவி, ஜெயப்பிரதா, சரத்பாபு மற்றும் ராம பிரபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதிலும் சிரஞ்சீவி தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படம் இதுதான். இதில் சிரஞ்சீவி குமார் என்னும் கதாபாத்திரத்தில் வைஷாலியுடன் 47 நாட்களிலேயே தனது திருமண வாழ்க்கையினை முடித்துக் கொள்கிறார். அந்த 47 நாட்களில் நடந்த கதையினை மிகவும் சுவாரசியமாக எடுத்துக் காண்பிக்கின்றனர்.

Also Read: பொங்கலை குறிவைத்து களமிறங்கும் 5 படங்கள்.. பான் இந்தியா படங்களால் வரும் ஆபத்து

ராணுவ வீரன்: 1981 ஆம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஜோடி சேர்ந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ஆகும். எம்ஜிஆர் அரசியலில் ஈடுபட்டதால் இப்படம் அவருக்கு கைநழுவி போனது.எம் ஜி ராமச்சந்திரனை மனதில் வைத்து எழுதிய இப்படத்திற்கு ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்தது அவரது சினிமா துறையில் ஒரு திருப்பமுணையை ஏற்படுத்திய படமாகஅமைந்தது. இப்படத்தில் தெலுங்கில் பிரபலமாக இருக்கக்கூடிய சிரஞ்சீவி எதிர்மறையான வேடத்தில் நடித்திருப்பார் .

மாப்பிள்ளை: 1989 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் ரஜினியுடன், அமலா, ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, வினு சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தில் ஸ்ரீவித்யாவை எதிர்த்து ரஜினி அமலாவை திருமணம் செய்து கொள்வார். ரஜினிக்கு நட்பு ரீதியாக சிரஞ்சீவி சிறப்பு தோற்றத்தில் தோன்றி உதவி செய்வார்.

Also Read: வாரிசு சினிமாவில் கொடிகட்டி பறக்கும் டாப் ஹீரோ.. ஒரே குடும்பத்தில் நடிக்கும் 8 பிரபலங்கள்

எங்கள் ஸ்வாமி ஐயப்பன்: 1990 ஆம் ஆண்டு இயக்குனர் தசரதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆகும். இதில் பார்த்திபன், ஆனந்தபாபு, திலீப், மலேசியா வாசுதேவன் உள்ளிட்டோர் ஐயப்ப பக்தர்களாக தனது பங்களிப்பை அளித்திருப்பர். அதிலும் சிறப்பாக ரஜினிகாந்த் மற்றும் சிரஞ்சீவியின் பதிவு செய்த காணொளி ஆனது இப்படத்தில் இடம்பெற்று இருக்கும்.

இவ்வாறு இந்த 4 படங்களும் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் தமிழ் படங்களாகும். அதிலும் 47 நாட்களுக்குள் கதாநாயகியை திருமணம் செய்து கொள்வேன் என சபதம் செய்து வெற்றி கண்ட 47 நாட்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அக்கட தேசத்திலும் டான் ஆன தளபதி.. சிரஞ்சீவி பாலையாவை ஓரம் கட்டிய விஜய்

- Advertisement -spot_img

Trending News