செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களில் நடிக்கப் போகும் சிரஞ்சீவி.. தரமான சம்பவம் இருக்கு

அஜித் நடிப்பில் சமீபத்தில் துணிவு படம் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில் ஹிந்தியில் வெளியாகும் பல படங்கள் தமிழில் ரீமேக் செய்து வெளியாகி உள்ளது. ஆனால் தமிழ் படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது மிகவும் குறைவுதான்.

அஜித்தின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர் சிரஞ்சீவி. மெகா ஸ்டாரான இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் வால்டர் வீரய்யா படம் வெளியானது.

Also Read : பப், பாருக்கு அடிமையான அஜித் பட ஹீரோயின்.. நைட்டு பார்ட்டில் அரங்கேறும் அம்மணியின் கூத்து

இந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு விஜய்யின் வாரிசு படம் தெலுங்கில் வெளியானது. இரு படங்களும் போட்டி போட்ட நிலையில் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இரண்டுமே கலவையான விமர்சனங்களை தான் பெற்று வந்தது. இந்நிலையில் சிரஞ்சீவி அடுத்ததாக கோலா சங்கர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படம் அஜித்தின் வேதாளம் படத்தில் ரீமேக் ஆகும். சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மெஹர் ரமேஷ் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார். மேலும் இந்த படத்தில் லட்சுமி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : மீண்டும் இணையும் மெகா கூட்டணி.. அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகும் அஜித்

மேலும் ஸ்ருதிஹாசன் நடித்த கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக சிரஞ்சீவி தற்போது கெட்டப்பை மாற்றி உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அஜித்தின் விசுவாசம் படத்தின் ரீமேக்கிலும் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.

அஜித், நயன்தாரா இருவரும் நடித்த விசுவாசம் படம் வசூலில் சக்கை போடு போட்டது. இப்போது சிரஞ்சீவி விசுவாசம் ரீமேக்கில் நடிப்பதால் கதாநாயகி யார் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் தெலுங்கில் இந்த படங்கள் மூலம் சிரஞ்சீவி தரமான சம்பவம் செய்ய உள்ளார்.

Also Read : அஜித்துக்கு எதிராக கிளம்பும் பிரச்சனை.. நீங்க பிழைக்க நாங்க பலிகடா ஆகணுமா?

Trending News