வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

குடிக்கு அடிமையான சாக்லேட் பாய்.. நடிகை பின்னால் சுற்றி மார்க்கெட் இழந்த ஹீரோ

சாக்லேட் பாய் ஹீரோ வந்த புதிதில் ஒட்டுமொத்த பெண் ரசிகைகளின் மனதையும் கொள்ளை கொண்டார். அப்படியே அவருடைய மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக உயர தொடங்கியது.

அதே நேரத்தில் காதல் நாயகனாக ஹீரோயின்களிடமும் இவர் நெருக்கம் காட்டி வந்தார். அதில் பப்ளி நடிகையிடம் இவருக்கு கூடுதல் நெருக்கம் ஏற்பட்டது.

அதையடுத்து டேட்டிங், ரகசிய மீட்டிங் என இருந்த நடிகர் நடிப்பில் கவனம் சிதற ஆரம்பித்தார். அதனாலயே அடுத்தடுத்து வெளியான இவருடைய படங்கள் தோல்வியை கண்டது.

சமீபத்தில் வெளியான படம் கூட மொக்கை வாங்கியது. இதனால் பாவம் நடிகர் ரொம்பவும் மனசளவில் நொந்து போய்விட்டாராம். ஏனென்றால் இப்படத்தை தான் அவர் பெரிதும் நம்பி இருக்கிறார்.

தற்போது புண்பட்ட மனதை சோம பானத்தை ஊற்றி தேற்றி கொண்டிருக்கிறாராம். இப்படி சதா நேரமும் நடிகர் குடிபோதையிலேயே இருப்பது திரை உலக வட்டாரத்தில் சத்தம் இல்லாமல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அதேசமயம் நடிகர் தன்னுடைய மார்க்கெட்டை எப்படி சரி பண்ணலாம் என்ற ஆலோசனையிலும் இருக்கிறாராம். ஆனால் வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்காத நிலையில் நட்பு வட்டாரத்தில் சோக கீதம் வாசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Trending News