திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சக்சஸ் கொடுக்காமலேயே பல கோடி சொத்து மதிப்பு.. மாதவனின் ரகசியத்தை வெளியிட்ட பயில்வான்

சாக்லேட் பாய் மாதவனுக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அலைபாயுதே படம் இவரது திரை வாழ்க்கையில் மைல் கல்லாக அமைந்தது. பெண் ரசிகர்களால் மாதவன் மேடி என்று அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் மாதவன் நடித்துள்ளார்.

கடைசியாக மாதவன் இயக்கிய, நடித்த ராக்கெட்ரி படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் பல வருடங்களாக சினிமா துறையில் பணியாற்றி வரும் மாதவனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

Also Read : சதுரங்க வேட்டை பாணியில் 5000 கோடி சுருட்டிய மோசடி கும்பல்.. பணத்தாசையால் சிக்கிய மாதவன், சூரி

அதாவது வெப் சீரிஸ், படங்கள், தொலைக்காட்சி என அனைத்திலும் பணியாற்றிய மாதவனுக்கு 103 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக பயில்வான் கூறியுள்ளார். மேலும் தற்போது வரை மார்க்கெட்டை இழக்காத மாதவன் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 20 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

நாடு முழுவதும் மாதவனுக்கு பல சொத்துக்கள் உள்ளது. சென்னையில் மாதவனுக்கு 18 கோடி மதிப்பிலான சொந்த வீடு உள்ளது. இது தவிர மும்பையிலும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளதாம். மேலும் மாதவன் சொகுசு கார்களையும் வைத்துள்ளாராம்.

Also Read : கழற்றிவிட்ட சூர்யா.. வீட்டை அடமானம் வைத்து 80 லட்சம் கொடுத்த மாதவன்

அதாவது அஜித் போல மாதவனும் கார், பைக் ரேஸ் பிரியராம். பிஎம்டபிள்யூ, ஆடி, ரேஞ்ச் ரோவர் போன்ற பல கார்களை மாதவன் வைத்துள்ளார். மேலும் பைக் சேகரிப்பில் அதிக ஆர்வம் உடையவராக மாதவன் உள்ளார். டுகாட்டி டயவல், யமஹா விமேக்ஸ் ஆகிய பைக்குகள் மாதவன் வசம் உள்ளது.

இது தவிர 24 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கே1500 ஜி டி எல் பைக் மாதவன் வைத்துள்ளார். அதிகமாக படங்களில் நடிக்காத மாதவனுக்கு இவ்வளவு சொத்து மதிப்பு இருப்பதற்கான காரணம், தற்போது வரை மார்க்கெட் இழக்காமல் ஒரு படத்திற்கு அதிக சம்பளம் வாங்குவது மற்றும் சிக்கன பேரொளியாக இருப்பது தான் என பயில்வான் கூறியுள்ளார்.

Also Read : மாதவன் மகனைப் போல பட்டையை கிளப்பும் கௌதம்மேனனின் மகன்.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா.?

Trending News