திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பொன்னியின் செல்வனுக்காக தீயாய் வேலை செய்யும் சோழர்கள்.. குல்பியை கொடுத்து கூல் செய்த லைக்கா

மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அதிரி புதிரியாக ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. ஏற்கனவே இது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் தற்போது நடைபெறும் ப்ரமோஷனும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

குல்பி சண்டை போடும் கார்த்தி

karth-shobitha
karth-shobitha

அந்த வகையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா உள்ளிட்ட அனைவரும் ஊர் ஊராக சென்று ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகின்றனர். அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் இப்போது சோஷியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது.

Also read: பொன்னியின் செல்வனில் கம்மி சம்பளம் வாங்கிய 5 பேர்.. படம் முழுக்க வந்த ஜெயராமுக்கு இவ்வளவு தான் சம்பளமா!

அதில் தற்போது படக்குழுவினர் அனைவரும் டெல்லிக்கு சென்றபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஏனென்றால் அதில் சோழர்கள் அனைவரும் குல்பி ஐஸ்கிரீமை ரசித்து சாப்பிடுவது போல் போஸ் கொடுத்திருக்கின்றனர். அதை லைக்கா நிறுவனமும் தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு நாங்கள் எப்போதுமே கூல் என்று குறிப்பிட்டு இருக்கிறது.

கூலாக ஐஸ்கிரீம் சாப்பிடும் சீயான்

vikram-aishwarya-lakshmi
vikram-aishwarya-lakshmi

அதிலும் அந்த புகைப்படத்தில் வந்தியத்தேவன் கார்த்தி, சோபிதா உடன் வாள் சண்டைக்கு பதில் குல்பி சண்டை போடுவது போல் போஸ் கொடுத்து இருக்கிறார். அதேபோன்று த்ரிஷா கையில் இருக்கும் குல்பியை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் மயங்கி போய் கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

குல்பியோடு ஸ்டைலாக போஸ் கொடுத்த திரிஷா

trisha-cinemapettai
trisha-cinemapettai

Also read: ஆஸ்கருக்காக படத்தை எடுக்கல.. சைடு கேப்பில் பிரம்மாண்ட இயக்குனரை குத்தி காட்டிய மணிரத்தினம்

அந்த வகையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொன்னியின் செல்வனுக்காக இவர்கள் தீயாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அதனாலேயே லைக்கா நிறுவனம் இந்த குளுகுளு பானத்தை கொடுத்து அவர்களை கூல் செய்திருக்கிறது.

சில் போஸ் கொடுத்த பூங்குழலி

aishwarya-lakshmi
aishwarya-lakshmi

Trending News