செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சினிமா டூ அரசியல்.. தொட்டதெல்லாம் வெற்றி.. உதயநிதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அரசியலில் களமிறங்கி ஜெயித்து விடலாம் என எண்ணுபவர்களுக்கும், சினிமாவில் நுழைந்து ஜெயித்து விடலாம் என நினைப்பவர்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் ஒரு நல்ல உதாரணம்.

சினிமாவில் வெற்றி

அவர் பாரம்பரியாமான திமுக குடும்பத்தின் பிரபல கட்சித் தலைவரின் பேரனான மகனாக இருந்தாலும் எடுத்தவுடன் கட்சிப் பதவியிலும், எம்.எல்.ஏவாகவும் ஆகவில்லை. தேர்தல் அரசியலில் குதிக்கும் முன், விஜயின் குருவி, சூர்யாவின் ஆதவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருந்தார்.

பல படங்களை ரெட் ஜெயிண் மூவிஸ் நிறுவனம் மூலம் விநியோகம் செய்து அதன் மூலம் சினிமாவைக் கற்றுக் கொண்டு, 2012 ஆம் ஆண்டு, ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம், எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகராக அறிமுகமானார். அதன்பின் நண்பேண்ட, இது கதிர்வேலன் காதல், கெத்து, கண்ணை நம்பாதே, நெஞ்சுக்கு நீதி, சைக்கோ, மனிதன், மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தா. அவை ஹிட்டாகின.

இப்படி சினிமாவில் தயாரிப்பிலும்,வி நியோகத்திலும் முன்னணி நிறுவனமாக இருந்து, நடிப்பிலும் தொடர்ந்து ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் நடித்து அசத்தினார்.

அரசியலிலும் வெற்றி துணைமுதல்வர் பொறுப்பு

அதன்பின், 2018 ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். அதன்பின் 2019 ஆம் ஆண்டு ஜீலை 7 ஆம் தேதி திமுக இளைஞர் அணி செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு93,285 வாக்குகள் பெற்று 6789 சதவீதம் வாக்குகளுடன் முதல் முதலாக எம்.எல்.ஏவாக தேர்வாகி சட்டசபைக்குள் நுழைந்தார்.

அதன்பின், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உதய நிதிக்கு இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் ஓராண்டு 9 மாதங்களுக்குப் பின் துணைமுதல்வராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ் நாட்டின் 3 வது துணைமுதல்வராகப் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

உதயநிதியின் சொத்து மதிப்பு?

தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் உதய நிதி, நவம்பர் 27 ஆம் தேதி தனது 48 வது பிறந்த நாளை கொண்டாடினார். வரும் தேர்தலில் தவெக தலைவர் விஜய்க்குப் போட்டியாளராக உதயநிதி இருப்பார் என பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், துணைமுதல்வர் உதயநிதியின் சொத்து மதிப்பு ரூ.80 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.

Trending News