வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

திருமணமாகி பிரிந்த 10 பிரபல ஜோடிகள்.. பிரதாப் போத்தன் முதல் நாக சைதன்யா வரை

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் தங்களுடன் பணியாற்றவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் சில கருத்து வேறுபாடுகளால் அவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து உள்ளனர். அதுபோல் திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற 10 ஜோடிகளை பார்க்கலாம்.

கமலஹாசன், சரிகா: நடிகர் கமலஹாசனின் முதல் மனைவி வாணியுடன் சில காலம் வாழ்ந்து வந்தார். அதன்பிறகு, அவருடன் நடித்த சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். இவர் மகள்கள் வளர்ந்தவுடன் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனது. அதன்பிறகு கமலஹாசன் நடிகை கௌதமியுடன் சில காலம் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகாமலே இருவரும் பிரிந்து விட்டனர்.

பார்த்திபன், சீதா: புதிய பாதை படத்தில் நடித்ததன் மூலம் பார்த்திபன், சீதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. சில கருத்து வேறுபாட்டினால் சீதா பார்த்திபனிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

ராமராஜன், நளினி: ராமராஜன் 80களில் முன்னணி நடிகையாக இருந்த நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு அருண், அருணா என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

பிரதாப் போத்தன், ராதிகா: ராதிகா 1985ம் ஆண்டு இயக்குனர் பிரதாப்பை திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஆண்டே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்பு 1990ம் ஆண்டு ரிச்சர்டு கார்டி என்பவரை லண்டனில் திருமணம் செய்து 1992ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். அதன்பின்பு 2001ம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார்.

ரகுவரன், ரோகினி: ரகுவரன் 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷிவரன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்துவிட்டார்கள்.

பிரகாஷ்ராஜ், லலிதா: நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை லலிதா குமாரி என்பவரை 1994ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும், மகனும் உள்ளார்கள். பிரகாஷ்ராஜ் அவருடைய முதல் மனைவி லலிதாவை 2009ல் விவாகரத்து செய்து விட்டு, 2010ம் ஆண்டு போனி வெர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சுரேஷ் மேனன், ரேவதி: நடிகை ரேவதிக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனனுக்கும், 1986ல் திருமணம் நடைபெற்றது. சுரேஷ்மேனன் தயாரித்த புதியமுகம் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 27 வருடங்களுக்குப்பின் சில கருத்து வேறுபாடால் விவாகரத்தானது

செல்வராகவன், சோனியா அகர்வால்: இயக்குநர் செல்வராகவன், நடிகை சோனியா அகர்வால் இருவரும் சேர்ந்து பல படங்களில் பணியாற்றியதன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர் செல்வராகவன் அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கீதாஞ்சலியைத் திருமணம் செய்து கொண்டார்.

ஏ எல் விஜய், அமலாபால்: தெய்வத்திருமகள் படத்தின் மூலம் இயக்குனர் ஏ எல் விஜய்யும், நடிகை அமலாபாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமான ஒரு வருடத்திற்கு உள்ளேயே இருவரும் பிரிந்து விட்டனர். ஏ எல் விஜய் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

நாக சைதன்யா, சமந்தா: தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமான நான்கு ஆண்டுகளில் சில கருத்து வேறுபாடுகளால் கடந்த அக்டோபர் மாதம் இவர்களுக்கு விவாகரத்தானது.

Trending News