கல்லா கட்டி முடிந்த குட் பேட் அக்லி.. கஸ்தூரி ராஜா காட்டம்

Ajith : அஜித்தின் நடிப்பில் கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி குட் பேட் அக்லி படம் வெளியாகி இருந்தது. மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை எடுத்திருந்தார். மேலும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ஏற்கனவே இந்த படத்தில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதற்காக இளையராஜா 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இருந்தார். அதன் பிறகு இளையராஜா பாடல்கள் காப்புரிமை உள்ள நிறுவனத்திடம் அனுமதி வாங்கிவிட்டதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டது.

இதையடுத்து தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா இப்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது மார்க் ஆண்டனி படத்தில் பஞ்சுமிட்டாய் பாடலை ஆதிக் ரவிச்சந்திரன் பயன்படுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் ஒத்த ரூபா மற்றும் தூதுவளை அரைச்சு ஆகிய பாடல்களை ஒலித்துள்ளனர்.

குட் பேட் அட்லி படத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் கஸ்தூரி ராஜா

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கஸ்தூரிராஜா இந்த மூன்று பாடல்களுமே இப்போது பிரச்சனையில் இருக்கிறது. இப்போது புதிதாக வரும் இயக்குனர்களுக்கு சொந்தமாக சிந்திக்கும் திறன் இல்லை. ஏன் அவர்களால் புதிய பாடல்கள் எடுக்க முடியவில்லை.

இளையராஜா, தேவா போன்ற இசையமைப்பாளர்கள் போன்றோர் இப்போது சினிமாவில் இல்லை. இசையில் அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை. மேலும் இந்த பாடல்கள் பயன்படுத்தியது தொடர்பாக சட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று கஸ்தூரிராஜா கூறியிருக்கிறார்.

படம் வெளியாகி ஒரு மாதத்தை தாண்டிய நிலையில் ஓடிடியிலும் மே 9 வெளியாகிவிட்டது. குட் பேட் அக்லி நன்றாக வசூல் வேட்டை செய்து கல்லா கட்டியது. இவ்வளவு நாள் கழித்த கஸ்தூரிராஜா நடவடிக்கை எடுப்பது படத்திற்கு பாதிப்பு ஏற்படாது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →