ஏஜென்ட் அமருக்கு போட்டியாக வளரும் 2 வாரிசு நடிகர்கள்.. எல்லா படங்களிலும் மிரளவிடும் நடிப்பு

தற்போது மலையாள நடிகர் பகத் பாசில் தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தற்போது தமிழ் இயக்குனர்கள் வில்லன் கதாபாத்திரம் என்றாலே முதலில் பகத் பாசிலை தான் தேர்வு செய்கிறார்கள். அந்த அளவுக்கு அவரது தோற்றமும், கண்களும் மிரட்டுகிறது.

இந்நிலையில் தற்போது பகத் பாசிலுக்கு போட்டியாக இரண்டு இளம் வாரிசு நடிகர்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களும் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்கள் தான். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் வாரிசான துல்கர் சல்மான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இங்கு முத்திரை பதித்தார்.

தற்போது அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் சீதா ராமம் படம் வசூல் வேட்டையாடி வருகிறது. தமிழ்நாட்டிலும் இப்படம் எல்லா தியேட்டரிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் துல்கர் சல்மான் தமிழ் படங்களிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

இதை தொடர்ந்து இரண்டாவதாக நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் ஏகப்பட்ட இளம் பெண் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தனக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கமலஹாசனின் விக்ரம் படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்ற நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

இவ்வாறு பகத் பாசிலை தொடர்ந்து மலையாள சினிமாவில் இருந்த வந்த வாரிசு நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இருவரும் தமிழ் ரசிகர்களை பெற்றுள்ளனர். மேலும் தொடர்ந்து இந்த இரு நடிகர்களும் நடிப்பில் மிரட்டி வருகிறார்கள்.