அசுர வேகத்தில் உருவெடுக்கும் இரண்டு இளம் ஹீரோக்கள்.. டாடாவிற்கு டஃப் கொடுக்கும் தூங்கு மூஞ்சி

கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற விஜய் டிவி சீரியல்களின் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான கவின். அதன் பிறகு பிக் பாஸ் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பேமஸ் ஆனார். அதன் பிறகு அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. நட்புன்னா என்னன்னு தெரியுமா, லிப்ட் போன்ற படங்களில் வளரும் நடிகராகவே தெரிந்த கவின் இப்போது டாடா படத்திற்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.

இந்த படம் நகர்ப்புறங்களில் மல்டிப்ளக்ஸ் ரசிகர்களை இந்த படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. டாடா படம் வெற்றியால் கவின் ரேஞ்ச் எங்கேயோ போய்விட்டது. இப்பொழுது இளம் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என கவினை வட்டம் இட்டு வருகின்றனர். சமீபத்தில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தில் கவின் ஒப்பந்தமாகி இருந்தார்.

ஊர் குருவி என்ற படத்தில் கவின் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்பொழுது கவினை நீக்கிவிட்டு தூங்கு மூஞ்சி ஹீரோவை புக் செய்து விட்டார்கள். முதலில் கவினை போன்றே சீரியல்களில் என்ட்ரி கொடுத்து, அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகர் அஸ்வின்.

இவர் வெள்ளித்திரைக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது 40 கதையை கேட்டுவிட்டு தூங்கிவிட்டேன் என ஓவர் கெத்து காட்டியதால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார்.

இதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டாலும் அவரை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினார்கள்.  அதன்பிறகு பல மாதம் சினிமாவை விட்டுவிலகி இருந்த அஸ்வின் மறுபடியும் பிரபு சாலமன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான செம்பி படத்தின் மூலம் மாஸ் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்திற்கு பிறகு அஸ்வினுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

ஆகையால் தற்போது இருக்கும் சூழலை வைத்துப் பார்க்கும்போது தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களான கவின் மற்றும் அஸ்வின் இருவரும் தான் அடித்துக் கொள்ளும் அளவுக்கு போட்டி போட்டு நடித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் கவினுக்கு டஃப் கொடுக்கும் ஹீரோவாக மாறி வருகிறார் 40 கதை அஸ்வின்.