விஜய் இல்லாத இந்த வருட பாக்ஸ் ஆபிஸ்.. போட்டியில ஜெயிச்சது தலைவரா? இல்ல AK-வா?

தமிழ் சினிமா 2026-ம் ஆண்டில் பாக்ஸ் ஆபிஸ் வணிக ரீதியாக பல சூடான போட்டியை சந்தித்து வருகிறது. பல பெரிய ஹீரோக்களின் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்த நிலையில், இதுவரை அதிக வசூல் செய்த Top Grossers பட்டியலை பார்ப்போம்.

No.1 – Good Bad Ugly (153 கோடி approx)

பிரம்மாண்ட தயாரிப்பில் வெளிவந்த Good Bad Ugly படம், தற்போதைய நிலவரப்படி 153 கோடி வசூலுடன் 2026-ன் Top Grosser ஆக முன்னிலை வகிக்கிறது. ஹீரோயிசம், மாஸ் சினிமா எலிமென்ட்ஸ், ரசிகர்களை கவரும் சண்டை காட்சிகள் அனைத்தும் படத்திற்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

No.2 – Coolie (140-142 கோடி approx)

வெறும் சில கோடிகளுக்கே பின் தங்கியுள்ள Coolie, 142 கோடி வசூல் செய்து பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்களின் “பெரிய திரை அனுபவம்” வேண்டுமெனும் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1000 கோடி வசூலை எதிர்பார்த்த கூலி தட்டு தடுமாறியது, ஆனாலும் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் வசூல் ரீதியாக உச்சி குளிர்ந்து உள்ளனர்.

No.3 – VidaaMuyarchi (83 கோடி approx)

அஜித் நடிப்பில் வெளிவந்த VidaaMuyarchi, தற்போது 83 கோடி வசூலுடன் 3வது இடத்தில் உள்ளது. ரசிகர்கள், படத்தின் இன்ஸ்பிரேஷனல் டோன் மற்றும் “மாஸ் + மெசேஜ்” கலவையை பாராட்டி வருகின்றனர்.

No.4 – Dragon (83 கோடி approx)

சைஃபை எலிமென்ட்ஸ் கொண்ட Dragon படம், VidaaMuyarchi-க்கு சமமான வசூலான 83 கோடி ஈட்டியுள்ளது. காலேஜ் பருவத்தில் இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக வெளிவந்த இந்த படம் இளசுகள் மத்தியில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

No.5 – Tourist Family (60-63 கோடி)

சிறிய பட்ஜெட்டில் வந்த Tourist Family, 63 கோடி வசூல் செய்து லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. குடும்ப ரீதியான கதை காரணமாக, புது வகை ரசிகர்கள் வரவேற்பும் கிடைத்துள்ளது.

No.6 – Thalaivan Thalaivii (43–45 கோடி approx)

45 கோடி வசூலுடன் பட்டியலில் இடம்பிடித்துள்ள Thalaivan Thalaivii, குடும்ப பங்கான கதையாக புருஷன் பொண்டாட்டிக்கு இடையே வரும் சண்டைகளை தத்ரூபமாக காட்டியிருப்பார் இயக்குனர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பு பாராட்டலுக்குரியது.

தற்போதைய வசூல் விவரங்களைப் பார்த்தால், Good Bad Ugly மற்றும் Coolie இடையே தான் பெரிய போட்டி உள்ளது. வருடத்தின் மீதம் வெளியாக இருக்கும் படங்களால் இந்த லிஸ்ட் மாற்றப்படுமா என்பது ரசிகர்களின் ஆவலான எதிர்பார்ப்பு.