அடுத்த ஆறு மாசத்தில் வெளியாக உள்ள 8 படங்கள்.. வெற்றிக்காக போராடும் சூர்யா

Suriya : இந்த வருடம் தொடக்கத்தில் நிறைய பெரிய பட்ஜெட் படங்கள் வெளியானாலும் தோல்வியை தான் சந்தித்தது. விடாமுயற்சி, தக் லைஃப் போன்ற படங்கள் எதிர்பார்க்காத அளவு மோசமான தோல்வியை கொடுத்தது. ஆனால் சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில் அடுத்த ஆறு மாதத்தில் கிட்டத்தட்ட 8 படங்கள் வெளியாக இருக்கிறது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறது.

இப்படம் கேங்ஸ்டர் கதையில் உருவாகி இருக்கிறது. அடுத்ததாக இதே மாதம் தனுஷின் குபேரா படம் வெளியாக உள்ளது. இதுதவிர தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி இருக்கும் இட்லிகடை படமும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

அடுத்த ஆறு மாதத்தில் வெளியாகும் 8 படங்கள்

சிவகார்த்திகேயனின் மதராசி படமும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டியூட் ஆகிய படங்கள் இந்த வருட ரிலீஸ் காத்திருக்கிறது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் படம் உருவாகி உள்ளது.

சூர்யாவின் கங்குவா படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. அதேபோல் ரெட்ரோ படமும் நடுநிலையான விமர்சனத்தை தான் பெற்றுள்ளது. சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் தனது 45 வது படத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்.

இந்த படம் இந்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக சூர்யா இப்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் 46வது படத்தில் நடித்து வருகிறார். ஆகையால் இந்த வருடம் முதல் பாதி மோசமாக போனாலும் இரண்டாம் பாதியில் கண்டிப்பாக நல்ல வெற்றி படங்களை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →