800 Trailer: கிரிக்கெட் வீரர்களின் பயோகிராபி படங்கள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பயோகிராபி படமும் தயாராகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து உருவாகி இருக்கும் இந்த 800 படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.
எம் எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் மதுர் மிட்டல் நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி தான் இதற்கு முன்பு முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் முரளிதரன் மீது ஏகப்பட்ட சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது.
அதனால் விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என்று தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் போர்க்கொடி தூக்கினர். அது மட்டுமல்லாமல் பட குழுவினருக்கும் விஜய் சேதுபதிக்கும் பல பகிரங்க மிரட்டல்களும் வந்தது. இதை அடுத்து தன்னால் ஒரு கலைஞர் பாதிக்கப்பட வேண்டாம் என்று முரளிதரன் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியும் இந்த படத்தில் இருந்து விலகியதாக அறிவித்தார். ஆனால் அவர் பயந்து தான் இதில் நடிக்க மறுத்ததாக பல விமர்சனங்கள் அப்போது எழுந்தது. இவ்வாறாக பெரும் சர்ச்சைகளை சந்தித்த இந்த 800 படத்தின் ட்ரெய்லர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தன்னுடைய வாழ்நாள் சாதனையாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது. அதிலும் ஹீரோ இந்த கதாபாத்திரத்திற்கு அப்படியே பக்காவாக பொருந்தியுள்ளார்.
மேலும் முழங்கை நேராக இல்லாத காரணத்தால் பல பிரச்சனைகளை சந்தித்த முரளிதரன் ஒரு கிரிக்கெட்டராக பலரையும் வியக்க வைத்தார். அப்படிப்பட்டவரின் பயோகிராபி படமாக உருவாகி இருக்கும் இந்த 800 படத்தை திரையில் காண்பதற்கு தற்போது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.