Kavin: நெருப்பில்லாமல் புகையாது என்று சொல்வார்கள், அப்படித்தான் கவினின் உண்மை முகமும் என பிரபலம் ஒருவர் சொல்லி இருக்கிறார். கவின் தற்போது மாஸ்க் என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் நயன்தாராவுடன் ஹாய் மற்றும் பிரியங்கா மோகன் உடன் ஒரு படத்திலும் இணைந்திருக்கிறார்.
ஏற்கனவே கவின் மீது ஏகப்பட்ட நெகட்டிவ் குற்றச்சாட்டுகள் வந்தன. படப்பிடிப்பு தளத்திற்கு லேட் ஆக வருகிறார், அதிகமாக ஆட்டிட்யூட் காட்டுகிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இது முற்றிலும் தன்னுடைய வளர்ச்சியை தடுக்க செய்யப்படும் சூழ்ச்சி என கவின் பேசியிருந்தார்.
இதுகுறித்து தற்போது வலைப்பேச்சு அந்தணன் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். அதாவது கவின் மீது எங்களுக்கு எந்த பகையும் கிடையாது. படப்பிடிப்பு தளத்தில் என்ன நடக்கிறது அங்கே இருப்பவர்கள் சொல்வதை கேட்டு தான் நாங்கள் இங்கு செய்தியாக கொடுக்கிறோம்.
படத்தின் இயக்குனர் புதுமுகம். ஹீரோவை பற்றி நெகட்டிவ் ஆக சொன்னால் படம் ஓடாது என்று பயந்து யாராவது கொடுக்கும் அழுத்தத்தால் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவு போட கூட அதிக வாய்ப்பு இருக்கிறது.
தன்னுடைய படத்தில் ஏதாவது சரியில்லாமல் போனால் அது தன்னுடைய வளர்ச்சியை பாதிக்கும் என உணர்ந்து அதில் மாற்றங்கள் ஏற்படுத்த சொன்னால் அது நியாயமான விஷயம். ஆனால் கவின் படப்பிடிப்பு தளங்களில் வேண்டுமென்றே அட்ராசிட்டிகளை செய்து வருகிறார்.
இயக்குனர் ஒரு வேலை எதிர்காலத்தில் பெரிய ஆளாக வளர்ந்தால் கண்டிப்பாக அப்போது கவினின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவார் என பேசி இருக்கிறார். மேலும் கவினுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தால் தான் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.