தளபதி, AR ரகுமான் வாக் அவுட் முதல், சூர்யா பிறந்தநாள் வரை.. கருப்பு கடந்து வந்த பாதை

Karuppu: சூர்யாவின் 50 ஆவது பிறந்தநாளை நிஜமாகவே பொன்விழாவாக மாற்றும் வகையில் கருப்பு படத்தின் டீசர் அமைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தொடர் சருக்கலை சந்தித்து வரும் சூர்யாவாக இருக்கட்டும் அவருடைய ரசிகர்களாக இருக்கட்டும் இந்த படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதை 50 சதவீதம் இந்த டீசர் பூர்த்தி செய்து விட்டதுதான். கடந்த 2024 இல் இருந்து கருப்பு கடந்து வந்த பாதையைப் பற்றி பார்க்கலாம்.

தளபதி 69: ஆர் ஜே பாலாஜி முதலில் இந்த கதையை நடிகர் விஜய் இடம் தான் சொல்லியிருந்தார். மேலும் இந்த படம் விஜய்யின் 69ஆவது படமாக உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்களிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விஜயின் அரசியல் நகர்வால் இந்த படத்தில் இருந்து அவர் விலகிக் கொண்டார்.

ஏ ஆர் ரகுமான்: கருப்பு படத்தின் அறிவிப்பு வெளியான போது படத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அதன் பின்னர் அறிமுக இசையமைப்பாளர் சாய் அபயங்கரை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்தார்கள்.

ரத்னா: மைதாலஜி மற்றும் பேண்டஸி கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து இயக்குனர் ரத்னாவும் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

த்ரிஷா: மௌனம் பேசியதே, ஆறு, மன்மதன் அம்பு, ஆயுத எழுத்து போன்ற படங்களில் சூர்யாவுடன் நடித்திருந்த த்ரிஷா 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கருப்பு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இணைந்தார்.

நட்சத்திரங்கள்: படத்தில் மற்ற கேரக்டர்களில் நடிக்கும் நடிகர்களில் விவரம் வெளியானது. சூர்யா மற்றும் திரிஷாவுடன் இணைந்து நட்டி, சுவாசிக்கா, சிவதா ஆகியோர் இந்த படத்தில் நடிப்பது இரட்டிப்பு நேர்மறை விஷயமாக இந்த படத்திற்கு கிடைத்தது.

ஆர் ஜே பாலாஜி: ஹீரோ, காமெடியன், இயக்குனர் என எடுத்த எல்லா அவதாரத்திலும் வெற்றி பெற்றுவிட்டார் ஆர் ஜே பாலாஜி. இவர் கருப்பு படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. தற்போது இந்த படத்தின் டீசரில் வெளியாகும் ஒரு சில காட்சிகள் இதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

போஸ்டர் & டீசர்: கருப்பு படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் கவனம் இருப்பது. இந்த போஸ்டர்களே படம் மிகப்பெரிய ஆக்சன் பிளாக் படமாக வரும் என்பதை முன்னமே அறிவுறுத்தி இருந்தது. தற்போது டீசர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் சூர்யாவுக்கு கண்டிப்பாக சூப்பர் ஹிட் படமாக அமையும் என இப்போவே கணிப்புகள் வெளியாக ஆரம்பித்துவிட்டது.