Dhanush: கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை என்று சொல்வார்கள். அப்படித்தான் இப்போது சுஷாந்த் சிங் மரணம் சம்பந்தமாக வெளியாகி இருக்கும் செய்தியும். தனுஷுக்கும், சுஷாந்த் மரணத்திற்கும் என்ன சம்பந்தம், இது முழங்காலுக்கும் உச்சந்தலைக்கும் முடிச்சு போடுவது போல் அல்லவா இருக்கிறது என தோன்றலாம்.
நடிகையின் லவ் பிரேக்கப்
சில நேரங்களில் நாம் அசால்ட் ஆக சமூகவலை தளங்களில் தள்ளி விட்டுப் போகும் மீம்ஸ்கள் கூட மிகப் பெரிய செய்தியை சுமந்திருக்கும். அப்படித்தான் இப்போது தனுஷ் சம்பந்தப்பட்ட மீம்ஸ் ஒன்று வெளியானது. அதில் தனுஷ் மற்றும் சாரா அலி கான் இருவரும் சேர்ந்து இருப்பது போல் ஒரு புகைப்படம் இருக்கிறது.
அந்த புகைப்படத்திற்கு கீழே ஒருவர் உஷாராக இருங்கள் தனுஷ், சுஷாந்த் சிங் மரணம் பற்றி உங்களுக்கு தெரியும் தானே என கமெண்ட் பண்ணி இருக்கிறார். இது என்னவாக இருக்கும் என தேடி பார்த்த போது தான், சாரா அலிகான் மற்றும் சுஷாந்த் இருவருக்கும் இடையே இருந்த உறவு பற்றி தெரிய வருகிறது.

சாரா அலி கான் மற்றும் சுஷாந்த் இருவரும் 2018 ஆம் ஆண்டு கேதார்நாத் என்ற படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் இவர்கள் பிரேக் அப் செய்து கொண்டார்களாம் .
சுஷாந்த் மரண வழக்கின் போது சாரா இடமும் விசாரணை நடந்தது. அப்போது இருவரும் காதலித்தது உண்மைதான் ஆனால் அவர் எனக்கு உண்மையாக இல்லாததால் பின்னர் இந்த உறவு முடிந்தது என சாரா சொல்லி இருக்கிறார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து சுஷாந்த் நண்பர் சாமுவேல் என்பவர் சுஷாந்த் நடித்த சான்சிரியா திரைப்படம் தோல்வி அடைந்ததால் சாரா அவரை பிரேக்கப் செய்துவிட்டார், இந்த அழுத்தத்தில்தான் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
தனுஷ் கலாட்டா கல்யாணம் திரைப்பட சமயத்தில் சாராவுடன் நல்ல நட்பாக பழகிக் கொண்டிருந்தார். அப்போதுதான் இந்த மீம்ஸ் வைரலாகப்பட்டிருக்கிறது.