2 தோல்வி படங்களை மட்டுமே கொடுத்த இயக்குனர்.. லோகேஷை பின்னுக்கு தள்ளக்கூடிய டைரக்டர்

Lokesh Kanagaraj : இப்போது லோகேஷ் தான் மோஸ்ட் வான்டெட் இயக்குனர் லிஸ்டில் இருக்கிறார். அந்த வகையில் லியோ படத்திற்கு பிறகு ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார். இந்த சூழலில் லோகேஷை பின்னுக்கு கூடிய அளவுக்கு ஒரு இயக்குனர் இருக்கிறார்.

ஆனால் அவருடைய முந்தைய படங்கள் எடுத்துக் கொண்டால் இரண்டு படங்கள் தான் இயக்கியிருக்கிறார். அந்த இரண்டு படங்களுமே தோல்வியை தழுவியது. அதாவது ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களை இயக்கியவர் தான் தியாகராஜ குமாரராஜா.

இவர் ஆரம்பத்தில் இளையராஜாவிடம் வேலை பார்த்திருக்கிறார். மேலும் வசனகர்த்தா மற்றும் பாடல் ஆசிரியர் என பல பரிமாணங்களை கொண்டிருக்கிறார்.நல்ல திறமையான நடிகராக இருந்தும் இவரது படங்கள் தற்போது வரை வெற்றிக்கனியை பெறவில்லை.

இவர் படங்கள் அதன் பிறகு தான் ரசிகர்களின் கவனம் பெற்று வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சூழலில் தியாகராஜா குமாரராஜாவின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். அவ்வாறு அவர் அடுத்த படத்தை கொடுத்தால் லோகேஷ் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள்.

இந்த சூழலில் வெப் சீரிஸிலும் தியாகராஜ குமாரராஜா பணிபுரிந்திருந்தார். அவருடைய மேற்பார்வையில் மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலஜி வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →