தில்ராஜூ நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்.. 1000 கோடி பட்ஜெட்டுடன் களத்தில் குதித்த பிரம்மாண்ட தயாரிப்பாளர்

தெலுங்கு திரை உலகில் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்த தில்ராஜு வாரிசு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். விஜய் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது இதனால் தில் ராஜு முன்னணி ஹீரோக்களை வைத்து இன்னும் அதிக திரைப்படங்களை தமிழில் தயாரிக்கும் முடிவில் இருக்கிறாராம்.

அவருக்கு போட்டியாக இப்போது பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஒருவரும் தமிழ் பக்கம் தன் கவனத்தை திருப்பி இருக்கிறார். தெலுங்கில் பிரபலமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தற்போது ஆயிரம் கோடி ரூபாயை அடுத்தடுத்த படங்களுக்காக ஒதுக்கி இருக்கிறது. அதிலும் இப்போது தமிழ் ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களை குறி வைத்திருக்கும் இந்த நிறுவனம் இதற்காக கடும் முயற்சியில் இறங்கி இருக்கிறதாம்.

ஏற்கனவே இந்த நிறுவனம் புஷ்பா உள்ளிட்ட பல படங்களை பிரமாண்டமாக எடுத்து அதிக வசூல் லாபம் பார்த்தது. அதை தொடர்ந்து இந்நிறுவனம் கிட்டத்தட்ட 8 படங்கள் வரை இப்போது தயாரித்துக் கொண்டிருக்கிறது. இப்படி பிசியான சமயத்திலும் இந்த தயாரிப்பு நிறுவனம் தமிழில் ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம் தில் ராஜுதான்.

அவர் இப்போது தெலுங்கையும் தாண்டி மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருவதை பார்த்த மைத்ரி நிறுவனம் அவரை ஓரங்கட்டும் அளவுக்கு பல பிளான்களை போட்டிருக்கிறது. அதன் முதல் கட்டமாக தமிழ் உட்பட வேறு சில மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் நடிகர்களை பார்த்து பேசி தங்கள் தயாரிப்பில் நடிப்பதற்கு சம்மதம் வாங்கி இருக்கிறார்கள்.

அதிலும் தமிழில் வெற்றிமாறனுக்கு இவர்கள் அட்வான்ஸாக 5 கோடி ரூபாய் வரை கொடுத்திருக்கிறார்கள். தற்போது விடுதலை திரைப்படத்தில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இருந்தாலும் அந்த நிறுவனம் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது நாம் இணைந்து படம் பண்ணலாம் என்று கூறி அட்வான்ஸை கொடுத்துள்ளார்களாம்.

அது மட்டுமல்லாமல் இதுவரை 300 கோடி ரூபாயை அட்வான்ஸுக்காக மட்டுமே அவர்கள் கொடுத்திருக்கின்றனர். இப்படி படு வேகத்துடன் களமிறங்கி இருக்கும் இந்த நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டுகளில் படம் எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் எப்போது வேண்டுமானாலும் இந்த நிறுவனத்தின் தமிழ் பட அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறது திரையுலக வட்டாரம்.