சினிமா செய்திகள்

அந்த சைக்கோ கூட படம் பண்ணவே கூடாது என முடிவெடுத்த அஜித்.. பின்னணியில் பொரட்டி எடுத்த சர்ச்சை

இயக்குனர் பாலா உடன் படம் பண்ணவே கூடாது என அஜித் முடிவெடுத்த காரணம்

By Arun · 27 டிசம்பர் 2023 · Updated 10 மே 2025
ajith

Ajithkumar: நடிகர் அஜித்குமார் உடன் இணைவதற்கு நிறைய இயக்குனர்கள் ஆசைப்படுவார்கள். அவர் ஆசைப்பட்டு பணியாற்ற நினைத்த ஒரு இயக்குனரையே, சில சம்பவத்தால் வெறுத்தும் ஒதுக்கி இருக்கிறார். அந்த அளவுக்கு அந்த இயக்குனர் அஜித்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார். இனி இந்த சைக்கோவுடன் இணையவே வேண்டாம் என அஜித் முடிவெடுக்கும் அளவுக்கு சம்பவம் நடந்திருக்கிறது.

ஒரு திறமையான கலைஞனுக்குள் திமிரு மற்றும் கோபம் ரொம்ப அதிகமாக இருக்கும் என சொல்வார்கள். அது இயக்குனர் பாலா விஷயத்தில் நூறு சதவீதம் பொருந்தும். இதனாலேயே பெரும்பாலான நடிகர்கள் பாலா படத்தை ஒப்புக் கொள்வது இல்லை. இது எல்லாம் தெரிந்திருந்தும் அஜித் குமார் மூன்று முறை பாலா படத்தில் நடிக்க ஆசைப்பட்டு, நடக்காமல் போயிருக்கிறது.

அஜித் மற்றும் விக்ரம் ஒரு சில படங்களில் இணைந்து பணி புரிந்திருக்கிறார்கள். அப்படி இருந்த பட்சத்தில், பாலா விக்ரமுக்கு சேது என்னும் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தார். சேது படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு அஜித் பாலா உடன் இணைந்து பணியாற்ற விரும்பினார். ஆனால் பாலா கதை சொன்ன விதம் அவருக்கு பிடிக்காமல் அந்த கதையை கைவிட்டு விட்டார்.

அதன்பின்னர் இயக்குனர் பாலா நடிகர் சூர்யாவுடன் இணைந்து நந்தா என்னும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். இந்த படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனால் அஜித் குமார் மீண்டும் பாலாவுடன் இணைவதற்காக கதை கேட்டார். அந்த கதையிலும் திருப்தி இல்லாததால் பாலாவுடன் இணையவில்லை.

இயக்குனர் பாலாவால் நொந்து போன அஜித்

பிதாமகன் படத்திற்கு பிறகு அஜித்துக்கு பாலா உடன் இணைந்தே ஆக வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. பாலா, அஜித்திடம் நான் கதை எல்லாம் சொல்ல மாட்டேன், நீங்கள் நீளமாக மீசை தாடி மட்டும் வளர்த்துக் கொண்டு ரெடியாக இருங்கள் என்று சொல்லி இருக்கிறார். அப்படி அஜித்தை வைத்து உருவானது தான் நான் கடவுள் படத்தின் கதை.

இயக்குனர் பாலாவுடன் பணியாற்ற விரும்பிய அஜித் அவர் சொன்னதை செய்திருக்கிறார். நான் கடவுள் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இருவருக்குள்ளும் செட்டாகாமல் அஜித்குமார் அந்த படத்தை விட்டு விலகி விட்டார். அதன் பின்னர் பாலா ஆர்யாவை நடிக்க வைத்து அந்த படத்தை ரிலீஸ் செய்தார்.