Kavin: பூனைக்கு மணி கட்டுவது போல், நடிகர் கவினைபெட்டி பம்பாய் அடக்கி இருக்கிறார் பெரும்புள்ளி ஒருவர். கவினுக்கு கிஸ், மாஸ்க், ஹாய் என அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. மேலும் தற்போது பிரியங்கா மோகன் உடன் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறார்.
எந்த அளவுக்கு படங்கள் வரிசை கட்டி நிற்கிறதோ அதே அளவுக்கு கவினின் அட்ராசிட்டியும் அதிகமாகிவிட்டது போல. அறிமுக இயக்குனர் கர்ணன் அசோக் இயக்கத்தில் கவின் நடிக்கும் மாஸ்க் திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரிப்பது எல்லோருக்குமே தெரியும்.
பாதி பட வேலைகள் முடிந்த கையோடு வெற்றிமாறன் இந்த படத்தை பார்த்திருக்கிறார். சொன்ன கதையும் இப்போதே எடுத்திருப்பதும் வேறு மாதிரி இருக்கிறதே என்று இயக்குனரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு இயக்குனர் என்னால் கவினை ஷூட்டிங் ஸ்பாட்டில் சமாளிக்கவே முடியவில்லை.
கேமராவை இப்படி வை, கதையை இப்படி மாற்றி என ஏகப்பட்ட குடைச்சல் கொடுக்கிறார் என சொல்லி இருக்கிறார். இதை இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என ஒரு தயாரிப்பாளராக வெற்றிமாறன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர தொடங்கி இருக்கிறார்.
வெற்றிமாறனிடம் வாலாட்ட முடியாது என்பது தெரிந்த கவின் பெட்டிப்பாம்பாய் இயக்குனர் என்ன சொல்லுகிறாரோ அதை சரியாக செய்கிறார். இந்த விஷயம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வந்ததாக வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.
மேலும் கவினுக்கும் தங்கள் தரப்புக்கும் எந்தவித பகையும் கிடையாது. படப்பிடிப்பு தளத்தில் நடப்பதை தான் நாங்கள் சொல்கிறோம் என்றும் பேசி இருக்கிறார். வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களிடம் பெயரை கெடுத்துக் கொள்வது கவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பது அவருக்கு புரிந்தால் சரி.