காவல்துறைக்கே சவால் விடும் தொடர் கொலைகள்.. ராட்சசனை மிஞ்சும் ரணம் அறம் தவறேல் ட்ரெய்லர்

Ranam Aram Thavarel Trailer: இப்போதெல்லாம் திகில், மர்மம் கலந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதிலும் தொடர் கொலைகள் சம்பந்தப்பட்ட இன்வேஸ்டிகேஷன் படங்கள் அதிக அளவில் வெளிவர ஆரம்பித்துள்ளது. அந்த வரிசையில் வெளிவந்த ராட்சசன், சைக்கோ ஆகிய படங்கள் மிகப்பெரிய கவனம் பெற்றது.

அதேபோன்று தற்போது வைபவ் நடிப்பில் அவருடைய 25வது படமாக உருவாகி இருக்கும் ரணம் அறம் தவறேல் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. ஷெரிப் இயக்கத்தில் வைபவ் உடன் இணைந்து நந்திதா ஸ்வேதா, தன்யா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே மாதவரம் ஏரிக்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் காவல்துறையினரால் கண்டெடுக்கப்படுகிறது. அதை தொடர்ந்து நடக்கும் விசாரணையில் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ் சிவா என்ற கேரக்டரில் வரும் வைபவ்வை உதவிக்கு அழைக்கின்றனர்.

உருக்குலைந்த முகத்தை கூட அப்படியே அச்சு அசலாக வரையும் திறமை கொண்ட இவர் தீர்க்கப்படாத வழக்குகளை க்ரைம் கதையாக எழுதும் எழுத்தாளராகவும் இருக்கிறார். அவர் கைக்கு வரும் இந்த வழக்கு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.

இதில் கொலை நடந்த விதமும், வழக்குகளின் கோணமும் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோன்று மிரட்டும் பின்னணி இசையும் பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இப்படியாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் நிச்சயம் வைபவ்வுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.