செய்தியை நிஜமாக்க ரோமியோ பிக்சர்ஸ் படும் பாடு.. அஜித் சுளித்ததால் ஆதிக் முழிக்கும் முழி

தமிழ் திரையுலகில் எப்போதும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் ஒரு நடிகர் என்றால் அது அஜித் குமார் தான். அவரது ஒவ்வொரு படம் மீதும் ரசிகர்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில், இயக்குநர் ராகுல், அஜித், ஆதிக் ரவிச்சந்திரன், மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தைக் கையாள திட்டமிட்டிருந்தனர்.

அஜித் குமார் தரப்பில் இருந்து சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் தனக்கு வேண்டும் என  கோரிக்கை வைக்கப்பட்டது . இவையின்றி படம் உருவாக்க முடியாத நிலை ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பொழுது இந்த படம் டிராப் ஆகும் தருவாயில் இருக்கிறது. 

தயாரிப்பாளர் ரீதியாக, இந்த உரிமைகள் இல்லாமல் படம் எடுக்க முடியாது என்பதால், இப்பொழுது ரோமியோ பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் முழித்துக் கொண்டு இருக்கிறது. இதனால் இயக்குனர் ஆதிக் பெரிய தலைவலியில் இருக்கிறார். 

அஜித் ரசிகர்கள் இந்த படத்தைப் பற்றி ஏதாவது அப்டேட் வருமா என்று ஆர்வமாக உள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும், இந்த டிராப் செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பல நிறுவனங்களிடம் இருந்து பைனான்ஸ் வாங்கி தான் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அஜித் இப்படி செக் வைத்ததால்  இந்த படம் தமக்கு லாபகரமாக அமையாது என்பதை உணர்ந்துள்ளார்.

ஊடகங்களில் இந்த செய்தி பரவியதால் இதை எப்படியாவது உறுதி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார் ரோமியோ பிச்சர்ஸ் ராகுல். ஆனால் படம் தயாரிப்பது லாபம் பெறுவதற்கு டிஜிட்டல் சேட்டிலைட் இல்லாமல் இது சாத்தியமாகாது என்பதால் பெரும்பாலும் இது கைவிடப்படும் என்று தெரிகிறது.