தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தவர் பார்த்திபன். தன்னுடைய படங்களில் மட்டுமல்லாமல், பிற இயக்குநர்கள் படங்களில் வித்தியாசமான வேடங்களில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் பகிர்ந்த ஒரு சுவாரஸ்யமான தகவல், சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாட்டாமை படத்தில் விஜயகுமார் கேரக்டர், காசி படத்தில் விக்ரம் செய்த கதாபாத்திரம் ஆகியவற்றில் முதலில் நான் தான் நடிக்க இருந்தேன் ஆனால் நான் இயக்குனர் ஆகணும் என்ற முடிவில் இருந்ததால் அந்த கதாபாத்திரத்தில் தன்னால் செய்ய முடியாமல் அதிலிருந்து அவர் விலகியதாகவும் அதற்குப் பிறகு தான் அந்த கதாபாத்திரங்கள் விஜயகுமார் மற்றும் விக்ரமிடம் சென்றன என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
மேலும் அதிர்ச்சியாக, 2001-ம் ஆண்டு வெளிவந்த அஜித் நடித்த “சிட்டிசன்” படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவரும் பார்த்திபன் தான். ஆனால், அந்த வாய்ப்பை அவர் தனக்கு வேண்டாம் என்று விட்டுவிட்டு, ஒரு இயக்குனரா யோசித்து அஜித்தை அந்த படத்திற்கு சிபாரிசு செய்ததாக தெரிவித்துள்ளார்.
சிட்டிசன் படம் அஜித்தின் கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் 10-க்கும் மேற்பட்ட கெட்டப்பில் நடித்த அஜித், ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அப்போதைய சூழலில், பார்த்திபன் அந்த படத்தில் நடித்திருந்தால் எப்படி இருக்கும்? தமிழ் சினிமாவின் வரலாறே மாறியிருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுகிறது.
பார்த்திபன் எப்போதும் வித்தியாசமான தேர்வுகளை செய்வதில் முன்னிலையில் இருந்தவர். தன் வாய்ப்புகளை மற்ற நடிகர்களுக்குக் கொடுத்தது, அவரின் தனித்துவத்தையும், தாராள மனசையும் காட்டுகிறது. அஜித்தின் ரசிகர்களுக்கு இன்று “சிட்டிசன்” ஒரு கல்ட் படம். அந்த படம் அஜித்தை வேறொரு உயரத்திற்கு கொண்டு சென்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இப்போது பார்த்திபன் கூறிய இந்த தகவல், “அஜித்துக்கு சிட்டிசன் வாய்ப்பு எப்படி கிடைத்தது?” என்ற கேள்விக்கு சரியான பதிலாக இருக்கிறது. அஜித்தின் வெற்றிக்குப் பின்னால் பார்த்திபனின் ஒரு பங்கு இருக்கிறது என்பதையும் ரசிகர்கள் இடையே ஒரு பேசும் பொருளாக இருந்து வருகிறது.